யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிறந்த நாள் சில தினங்களுக்கு முன்பு அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினரால் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
பரமக்குடியில் தன்னுடைய அப்பாவின் சிலையைத் திறந்து வைத்த போது கமல்ஹாசன் அவரது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் நடிகை பூஜா குமார் இருந்தார். பின்னர் சென்னையில் தன் அலுவலகத்தில் இயக்குனர் பாலசந்தர் சிலையைத் திறந்து வைத்த போதும் அவர் இருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் கமல்ஹாசனின் பிறந்த நாளையும் மீறிய ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கைதான் என்றாலும் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து பொதுவாழ்வில் இறங்கிவிட்டார். அதனால் அவர் மீதான விமர்சனங்கள் வருவது இயற்கையான ஒன்றுதான்.
கமல்ஹாசனுக்கும் பூஜா குமாருக்கும் 23 வயது வித்தியாசம் உள்ளது. அவர்கள் இருவரில் யாராவது ஒருவராவது இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் பதிலளிப்பார்களா என சிலர் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே கேட்கிறார்கள்.
இதனிடையே, ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருடனும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பூஜா குமார் அது குறித்து நான் அதிர்ஷ்டசாலி எனத் தெரிவித்துள்ளார்.