Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சின்னத்திரையில் ரூபினி ரீ எண்ட்ரி

10 நவ, 2019 - 11:40 IST
எழுத்தின் அளவு:
roopini-to-re-entry-through-small-screen

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் படங்களில் நடித்த ரூபினி கூலிக்காரன் படத்தில் விஜயகாந்த் ஜோடியாக அறிமுகமானர். அதன் பிறகு ரஜினியுடன் மனிதன், ராஜா சின்ன ரோஜா, கமலுடன் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் விஜயகாந்த்துடன் புலன் விசாரணை, உள்பட பல படங்களில் நடித்து 80களில் பிசியான நடிகையாக இருந்தார்.தென்னிந்திய மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இந்திப் படங்களிலும் நடித்தார். அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி மும்பையில் செட்டிலாகிவிட்டார்.


தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சினிமாவில் அல்ல... சின்னத்திரையில். ராதிகா தயாரித்து நடிக்கும் சித்தி 2 சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் ரூபினி. இதற்காக சென்னை வந்துள்ள அவர் சித்தி படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். " குடும்ப பொறுப்புகள் அனைத்தும் முடிந்தது. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தபோதுதான் சித்தி அழைப்பு வந்தது. மறக்காமல் நினைவு வைத்து அழைத்ததே எனக்கு பெருமைதான். நல்ல கேரக்டர்கள் அமைந்தால் சினிமாவிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். அது சித்தியை பாதிக்காதவாறு இருக்க வேண்டும்" என்கிறார் ரூபினி.



Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கோடீஸ்வரி : ராதிகாவுக்கு அமிதாப் பாராட்டுகோடீஸ்வரி : ராதிகாவுக்கு அமிதாப் ... நீண்ட நாள் காதலியை மணந்த நடிகர் அன்வர் நீண்ட நாள் காதலியை மணந்த நடிகர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Believe in one and only God - chennai,இந்தியா
13 நவ, 2019 - 21:04 Report Abuse
Believe in one and only God இந்த பெண் மும்பையில் சாதாரண பெண்ணாக இருப்பார். கொஞ்சம் short தான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in