Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிராமா போட்டு பேர் வாங்க வேண்டிய அவசியமில்லை: சேரன்

10 நவ, 2019 - 10:39 IST
எழுத்தின் அளவு:
director-cheran-on-his-role-in-bigg-boss-3-session

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கெடுத்தவர்களில் இயக்குநர் சேரனும் முக்கியமானவர். அவர், அப்பா ஸ்தானத்தில் இருந்து போட்டியாளர்களுக்கு இடையே நடந்த காதல், சண்டை உள்ளிட்டவைகளை டீல் செய்தார். இதனாலேயே சிலரோடு அவருக்கு கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது.


அப்பா ஸ்தானத்தில் இருந்து நடிகை லாஸ்லியா, கவின் மீது பாசம் காட்டி காதலை வெளிப்படுத்திய போது, நிறைய அறிவுரைகளை கூறினார் சேரன். தன்னை, நடிகை லாஸ்லியா அவமானப்படுத்திய போதும், அது குறித்தெல்லாம் கவலைப்படாமல் பொறுமையாக எல்லோரையும் டீல் செய்தார் இயக்குநர் சேரன்.


இந்நிலையில், இயக்குநர் சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்தவைகள் குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது:


லாஸ்லியா, பிக்பாஸ் வீட்டிலிருந்த போது, என்னிடம் தன்னுடைய குடும்பம்; பெற்றோர் குறித்தெல்லாம் நிறைய கவலையோடு பேசியிருக்காங்க. அப்பா ஸ்தானத்தில் வைத்து என்னிடம் அவர் நிறைய விஷயங்களை ஓபனாக பகிர்ந்துகிட்டாங்க. ஆனால், அடுத்தடுத்த நிலைகளில் அவரிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. கவின் மீது அவருக்கு ஒருவிதம் ஈர்ப்பு ஏற்பட்டது. இருவரும் ஒண்ணா உட்கார்ந்து பேச ஆரம்பிச்சாங்க. அது காதலாகவும் மாறியது. நெருக்கமா பழகினாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கும் எதிர்காலம் குறித்தெல்லாம் யோசிக்கத் துவங்கினாங்க; பேசினாங்க. அவங்க அப்பா எப்படி பீல் பண்ணுவார்னு நான் பீல் பண்ணத் துவங்கினேன். அந்த பயம் எனக்குள் இருந்துகிட்டே இருந்துச்சு. கவின் குடும்பம் குறித்தும் நிறைய கவலைப்பட்டேன். ஆனால், என்னுடைய நல்ல நோக்கத்தையெல்லாம் நடிகர் கவின் தப்பா புரிஞ்சுகிட்டாரு. நான் டிராமா பண்ணுவதா நினைச்சுகிட்டாரு. நான் ஏற்கனவே பேர் வாங்கிட்டேன். இந்தமாதிரியெல்லாம் செஞ்சுதான் நான் பேர் வாங்கணும்னு அவசியம் இல்லை. அதையும் கூட அவரிடம் சொன்னேன். ஆனால், அதையெல்லாம் ஏற்கும் மனநிலையில் அவர் இல்லை.


இவ்வாறு சேரம் கூறியுள்ளார்.Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சிலை திறப்பு விழாவில் ‛மீ டூ' வைரமுத்து: கமலை சாடும் சின்மயிசிலை திறப்பு விழாவில் ‛மீ டூ' ... ஹாலிவுட் படத்துக்கு குரல் கொடுக்கும் ஸ்ருதி ஹாசன் ஹாலிவுட் படத்துக்கு குரல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

LAX - Trichy,இந்தியா
11 நவ, 2019 - 01:17 Report Abuse
LAX மகள் விஷயத்தில் பட்ட போராட்ட அனுபவத்தில், மகள் வயதிலிருக்கும் அந்த லூஸ்லியாவிடமும் அக்கறை காட்னீங்க.. Good Sir.. பெற்று வளர்த்த மகளுக்கு நிதர்சனத்தைப் புரிய வைக்கவே படாத பாடு பட்ட நீங்க.. கவின் போன்ற ஆட்களிடம் சிக்கும் இளம் பெண்களுக்கு புரிய வைப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை நீங்களே நன்கு உணர்ந்திருப்பீங்க.. ரஜினியோட ஒரு படத்துல வரும் டயலாக் (ஒண்ண விட ஒண்ணு பெட்டரா தான் தெரியும்) மாதிரி பெண்கள் விஷயத்தில் கவினைப் போன்றவர்கள் ஆங்காங்கே இருக்கும் சீரழிந்த சமுதாயமாக இன்றைக்கு மாறி விட்டது.. இதற்கு தற்போது அன்றாடம் ஆங்காங்கே நடக்கும் அவல சம்பவங்களின் செய்திகளே சான்று.. கவின் வயதுடைய சிலரும்.. கவினைப் போன்ற கீழ்த்தரமான எண்ணம் கொண்ட பலரும் கவினை ஆதரிப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.. என்ன செய்ய சேரன் சார்..? இவர்களுக்கெல்லாம் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் வசனத்தைத் தவிர வேறேதும் சொல்வதற்கில்லை.. "இவர்கள் வயதில் மூத்தவர்களாகி இவர்களின் (பெண்) பிள்ளைகள் இப்படி தராதரமற்ற ஒருவனோடு இப்படியொரு உறவில் பிடிவாதமாக இருக்கும்போது தெரியும் அந்த வலி.." சொல்லித் திருந்தா ஜென்மங்கள்.. இருந்தாலும்.. நம்மால் முடிந்தவரை வேண்டாத பாதையை நாடுபவர்களை எச்சரிக்க சொல்லிக் கொண்டே இருப்போம்..
Rate this:
ram -  ( Posted via: Dinamalar Android App )
10 நவ, 2019 - 16:42 Report Abuse
ram sir ரெண்டு பேரோட லைஃப்..... பிக்பாஸ் முடிஞ்சு ஒரு மா சாரி உங்கள பத்தி பேசாதீங்க...... பாவம் அந்தப் பையன் கவிதை வாழ்க்கை அழித்து விடாதீர்கள்.
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
10 நவ, 2019 - 11:38 Report Abuse
Allah Daniel ஊருக்குத்தான் உபதேசம்...சொந்த பொண்ணு லவ் விஷயத்தில் ஒன்னும் கிழிக்க முடியில..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in