Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிலை திறப்பு விழாவில் ‛மீ டூ' வைரமுத்து: கமலை சாடும் சின்மயி

09 நவ, 2019 - 20:17 IST
எழுத்தின் அளவு:
Chinmayi-questions-Me-Too-accused-Vairamuthu-attending-in-Kamal-function

உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள், தங்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாகச் சொல்லத் துவங்கினர். பாடல் ஆசிரியர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்தார் பாடகி சின்மயி. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பியது. சிலர் அவரை அவதூறாக பேசினர். பலரும் ஆதரித்தனர். தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், தனது அலுவலகத்தில் பாலசந்தரின் சிலையை திறந்துள்ளார். இந்த விழாவில் ரஜினிகாந்த், மணிரத்னம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களுடன் வைரமுத்துவும் பங்கேற்றார். பாலியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்ட வரை எதற்காக இந்த விழாவிற்கு அழைத்தார்கள் என சின்மயி கமலை மறைமுகமாக சாடி உள்ளார்.

இதுப்பற்றி இன்ஸ்டாகிராமில், நான் இங்கே குறிப்பிடுவது வைரமுத்துவை. ஒரு மனிதன் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு ஆளானால் அவனது வாழ்க்கையே அழிந்துவிடும். முகத்தை வெளியே கூட தலைக்காட்ட முடியாது.

அப்படிப்பட்ட குற்றவாளியான வைரமுத்து தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் பல திமுக நிகழ்வுகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி பயிற்சி அகாடமி நிகழ்வுகள், தமிழ் மொழி நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் மற்றும் தொழில் நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு எதுவும் நடக்கவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணான நான் தடை செய்யப்பட்டேன். இது தான் தமிழ் சினிமாவில் உள்ள பெரியவர்களால் எனக்கு வழங்கப்பட்ட நீதி என பதிவிட்டுள்ளார்.

மேலும் டுவிட்டரில், ‛‛பாலியல் குற்றவாளிகள் பொதுமேடையில் தங்கள் இமேஜை எப்படி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். இவர்களில் சில அரசியல்வாதிகளும் அடக்கம். இவர்களை நினைத்தால் பயமாக உள்ளது'' என டுவிட்டரில் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (72) கருத்தைப் பதிவு செய்ய
கவர்ச்சி மழை பொழியும் கிரண்கவர்ச்சி மழை பொழியும் கிரண் டிராமா போட்டு பேர் வாங்க வேண்டிய அவசியமில்லை: சேரன் டிராமா போட்டு பேர் வாங்க வேண்டிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (72)

Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா
14 நவ, 2019 - 17:32 Report Abuse
Vmmoorthy Moorthy கோர்ட் என்று ஓன்று இருக்கிறதே அங்க போகாமல் மீடியாவில் அழுது புலம்பி என்னப்பயன்.
Rate this:
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
12 நவ, 2019 - 14:52 Report Abuse
NewIndia_DigitalIndia இவளே ஒரு பிராடு , அதனால தான் மக்கள் நம்பவில்லை . சவுகார் ஜானகி சின்மயியை எப்படி விளாசி உள்ளார் பாருங்கள்
Rate this:
krish - chennai,இந்தியா
12 நவ, 2019 - 19:49Report Abuse
krishசௌகார் ஜானகி தராசை வைத்து, சின்மயீயை எடை போடுதல், எனக்கு தவறாக படுகிறது....
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
12 நவ, 2019 - 11:46 Report Abuse
Vaduvooraan நியாயமான புரிந்து கொள்ளக்கூடிய ஆதங்கம் தான். முன்பெல்லாம் கோடம்பாக்கத்தில் வசிப்பதை சொல்லவே தயங்குவார்கள்- சினிமாக்காரர்கள் இருக்கிற பகுதியென்றால் அது ஒரு மாதிரியான பகுதி என்ற பரவலான எண்ணத்தினால் அந்த மாதிரி பாண்டிச்சேரி போயிருந்தேன் என்றாலே நக்கல் அடிப்பார்கள், காரணம் பாண்டிச்சேரி என்றாலே அன்றைய தமிழகத்தில் கிடைக்காத கள், சாராயம் என்பதால் இன்று நன்கு படித்த பாரம்பரியம் மிகுந்த குடும்பங்களில் இருந்து வருபவர்கள் கூட சினிமாவையும் அதன் ஒழுங்கில்லாத போக்கையும் ஏற்றுக் கொள்வதுடன் அதை ஒரு தொழிலாக கொண்டும் விட்டார்கள். புகழ், பணம், எல்லாம் சரியாக நடந்தால் அரசியலில் தலைமைப் பொறுப்பு என்கிற போது கவர்ச்சிகரமாகத்தானே இருக்கும்? சின்மயி யின் துணிச்சல் அசாத்தியமானது. அவர் சொல்வதை ஊடகங்களோ வழக்கமாக பொங்கி எழுகிற முற்போக்கு பெண்ணிய அமைப்புகளோ சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. அரசியல் ரீதியாக பலம் பொருந்திய இனத்தை சார்ந்தவராக இருந்திருந்தால் இன்னும் நிறைய போராளி, ரஸ்தாளி, பெருச்சாளி என்ற பெயரில் வேலையில்லாத இயக்குநர்கள் சின்மயிக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கியிருப்பார்கள். கடைசியாக ஒரு விஷயம். சின்மயி யின் அளவுகோல் படி இந்த விஷயத்தை அணுகினால் திரைப்படத் துறையில் இருக்கும் அத்தனை பிரபலங்களையும் நாம் ஒதுக்க வேண்டி வரும் ஒருத்தரும் வெளியே தலைகாட்ட முடியாது. அந்த மாதிரி அறச்சீற்றத்துடன் சினிமா கலைஞர்களை பகிஷ்கரிக்கும் அளவு நாம் நியாயமானவர்களோ சமுதாய சிந்தனையோ உள்ளவர்களா என்ன? இன்னும் சினிமாக்காரர்களுக்கு கோயில், கட்அவுட், கற்பூர ஆர்த்தி, பாலாபிஷேகம் இதை தாண்டியே வரவில்லையே நாம்
Rate this:
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
11 நவ, 2019 - 23:32 Report Abuse
Rajagopal பொறுக்கிகள் மத்தியில் ரஜனிகாந்த் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
Rate this:
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
12 நவ, 2019 - 14:43Report Abuse
NewIndia_DigitalIndiaசில அரசியல் பொறுக்கிகளை விட இவர்கள் மேல் என்று நினைக்கிறார்...
Rate this:
Sankarm Sankar - Chennai,இந்தியா
11 நவ, 2019 - 13:45 Report Abuse
Sankarm Sankar உண்மை வெல்லும் என்பதே இதற்க்கு சாட்சி , உண்மையிலே தாங்கள் பாதிக்க பட்டு இருந்தால் உடனே குரல் கொடுத்து இருக்க வேண்டும் அதை விடுத்தது ., ஆற ,அமர புகார் சொல்வது என்பதை யாரும் நம்ப மாட்டார்கள் ( திருடனுக்கு தேள் கொட்டின கதைதான் ) திருடும் போது திருடனுக்கு தேள் கொட்டினால் கத்த மாட்டான் ஏன் என்றால் ., அவன் செய்யும் திருட்டு தனத்தை காட்டி கொடுத்துவிடும் அல்லவே அதுபோலத்தான் உள்ளது ., அதனால் நாங்கள் நம்ப தயாரா யில்லை
Rate this:
மேலும் 65 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in