Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஷாரூக்கான் - அட்லி கூட்டணியில் 3 படங்கள்?

09 நவ, 2019 - 18:17 IST
எழுத்தின் அளவு:
3-films-in-SRK---Atlee-combination

தமிழில் 'ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில்' என தான் இயக்கிய நான்கு படங்களில் மூன்று படங்களை முன்னணி ஹீரோவான விஜய்யை வைத்து இயக்கி தன்னுடைய ஸ்டார் இயக்குனர் இமேஜை உயர்த்திக் கொண்டவர் அட்லி.

அந்த ஒரு அடையாளமே அட்லியை பாலிவுட் திரையுலகத்திலும் கொண்டு போய் சேர்த்துவிட்டது. 'பிகில்' படப்பிடிப்பு நடந்த போதே கடந்த ஏப்ரல் மாதத்தில் சென்னையில் ஹிந்தி நடிகர் ஷாரூக்கானை சந்தித்துப் பேசினார். அதன் காரணம் என்ன என்பது 'பிகில்' வெளியீட்டு சமயத்தில்தான் தெரிய வந்தது.

'பிகில்' படத்திற்குப் பிறகு ஷாரூக்கான் நாயகனாக நடிக்க உள்ள படத்தை அட்லி இயக்க உள்ளார். சமீபத்தில் ஷாரூக்கான் பிறந்த நாள் விழாவில் கூட தனது மனைவியுடன் கலந்து கொண்டார் அட்லி.

இந்நிலையில், ஷாரூக்கான் அவரது தயாரிப்பு நிறுவனத்திற்காக அட்லியை மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது உண்மையாக இருந்தால் அடுத்த சில வருடங்களுக்கு தமிழ் சினிமா பக்கம் வரமாட்டார் அட்லி.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
46 வயதில் 2வது திருமணம் : போனிகபூர் வீட்டு மருமகளாகும் மலைக்கா அரோரா46 வயதில் 2வது திருமணம் : போனிகபூர் ... கிர்த்தி பிரமிப்பு! கிர்த்தி பிரமிப்பு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
11 நவ, 2019 - 07:30 Report Abuse
Mirthika Sathiamoorthi படம் இல்லாட்டாலும் பரவாயில்லை...அவரை அங்கேயே இருக்க சொல்லுங்க...
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
10 நவ, 2019 - 17:55 Report Abuse
shoba atlee = cinifield gaali
Rate this:
SATHISH - nagapattinam ,இந்தியா
10 நவ, 2019 - 06:58 Report Abuse
SATHISH  ரொம்ப சந்தோசம் எங்க தளபதி தப்பிச்சிட்டாரு.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in