Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் சாவை கண்ணால் பார்த்தேன்: விஷால்

09 நவ, 2019 - 15:52 IST
எழுத்தின் அளவு:
I-saw-my-death-in-my-eyes-says-Vishal

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ள ஆதிரடி ஆக்ஷன் படம் ‛ஆக்ஷன். படத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாய் நடக்கின்றன.

இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய விஷால், ‛‛சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம் தான் முதலில் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சி தான். நாங்கள் மேடையில் அமர்ந்திருப்பதற்கும், இந்த அமைப்பைக் கொண்டு வருவதும் சாதாரணமான செயல் அல்ல. அதை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவிசந்திரன் செய்திருக்கிறார்.

சங்க மித்ரா தான் சுந்தர்.சி-யின் கனவு திரைப்படம். ஆனால், அப்படம் தாமதமாவதால் இப்படத்தை எடுத்து விட்டோம். என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிப்பட்ட திரைப்படமும் ஆக்ஷன் தான். ஏனென்றால், ஒரு கணத்தில் என் சாவை என் கண்ணால் பார்த்தேன். ஒரு காட்சியில் என் கைகளை தடுக்க கொண்டு வரும்போது கையிலும், காலிலும் அடிப்பட்டு 5 மாதங்கள் படப்பிடிப்பு நடக்க விடாமல் செய்தது.

அதன்பிறகு ஒரு காட்சியில் இயக்குநர் சுந்தர்.சி மற்றும் தயாரிப்பாளர் ரவி இருவரையும் எதிர்கொள்வது சிரமமாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தாமல் எனக்காக காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தினார்கள். வருடம் ஒருமுறை சுந்தர்.சியுடன் பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும். என் குருநாதன் அர்ஜுன் சார் தான். இயக்குனராக நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் ஈகோ பார்க்காமல் இயக்குநர் சுந்தர்.சியுடன் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும். ஒரு சாதாரண இடத்தையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவார்.

90 நாட்களில் இப்படத்தை முடித்தது சவாலான விஷயம். உதவி இயக்குநராக நான் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்படத்தின் மூலம் எனக்கு அமைந்தது. அவரிடம் கற்றுக் கொண்டதை இனி வரும் என் படங்களில் பயன்படுத்துவேன். ஆதி மாதிரியான திறமையான இளம் இசையமைப்பாளர் பலர் வரவேண்டும்.

எனக்கு அடிப்பட்ட பிறகு, அன்புறிவு, சுந்தர்.சி இருவரும் சண்டைக் காட்சிகளில் டூப் போட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், நான் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், இப்படத்திற்கு இருந்த சவாலான விஷயம் படத்தொகுப்பு. அதை ஸ்ரீகாந்த் திறமையாக செய்து முடித்திருக்கிறார்.




இவ்வாறு பேசினார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நடிகைகள் என்றால் இளக்காரமா.? - ராஷ்மிகா கோபம்நடிகைகள் என்றால் இளக்காரமா.? - ... அருவருக்கத்தக்க ஆபாச பதிவு: சிரஞ்சீவி, நாகார்ஜூனா உடன் ஸ்ரீரெட்டி வம்பு அருவருக்கத்தக்க ஆபாச பதிவு: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

வால்டர் - Chennai,இந்தியா
11 நவ, 2019 - 10:53 Report Abuse
வால்டர் நீ ஒருவாட்டிதான் பாத்திருக்க. உன் படம் ரிலீஸ் ஆகுற ஒவ்வொருவாட்டியும் நாங்க பாக்கறோம். கல்யாணம் பன்னிட்டு செட்டில் ஆகு போ.
Rate this:
LAX - Trichy,இந்தியா
11 நவ, 2019 - 00:48 Report Abuse
LAX ம்.்கொளுத்திப் போடு. கொளுத்திப் போடு. நீ இங்க சொல்லியது போல 'பணம் மட்டும் தான் முக்கியம்' னு.. (திருட்டு சி. டி. விஷயத்துல நீ காசுக்காக களமிறங்கி ஸீன் போட்டதெல்லாம் அனைவரும் அறிந்ததே..) அப்புற மென்ன..? ஒரே குஷால் தான்..
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
10 நவ, 2019 - 17:08 Report Abuse
Endrum Indian என் சாவை கண்ணால் பார்த்தேன் - போற போக்கில் சொன்ன வார்த்தைகளை - சொன்ன பிற எல்லா வார்த்தைகளையும் புறத்தில் தள்ளி - அதாவது தோல் காமி பணம் பண்ணு தொழிலாளர்கள் என்றால் உயர உயர தஷாகி வைத்து விளம்பரம் செய்ய வேண்டும்??????சவாலான விஷயம், சுந்தர் சிஇடம் உதவி இயக்குனராக இருக்கவேண்டும், உடல் நிலை நன்றாக இருக்கும் இதெல்லாம் பெரிதாக தோன்றவில்லை???ஏன்னா இதில் விளம்பரம் செய்ய முடியாது??? .......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in