Advertisement

சிறப்புச்செய்திகள்

கொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராண திருமணம் | சுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் எட்டுமா டிரைலர்? | வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.100 கோடியை நெருங்கும் 'கைதி' வசூல்

09 நவ, 2019 - 12:27 IST
எழுத்தின் அளவு:
Kaithi-to-be-reach-in-Rs.100-crore-club

இந்த தீபாவளிக்கு விஜய் நடித்த 'பிகில்', கார்த்தி நடித்த 'கைதி' படங்கள் வெளியாகின. 'பிகில்' படத்தின் தயாரிப்புச் செலவும், வெளியான தியேட்டர்கள் எண்ணிக்கையிலும் அந்தப் படம் பிரம்மாண்டப் படம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், 'கைதி' படம் மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நிறைவான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

இரண்டு படங்களும் இரண்டு விதங்களாகப் பேசப்பட்டன. 'பிகில்' படம் கமர்ஷியல் படம் என்றும், 'கைதி' படம் தரமான படம் என்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. ஆனால், கமர்ஷியல் ரீதியில் 'கைதி' படம் பெரிய வசூலைக் குவித்தது. அதற்கு படத்திற்கு ஆதரவாக வந்த விமர்சனங்களும் ஒரு காரணமாக அமைந்தது. சில நாட்கள் முன்பு வரை இப்படம் 80 கோடி வசூலை அள்ளியதாகச் சொன்னார்கள்.

மேலும், 250 தியேட்டர்களில் வெளியான இப்படம் மூன்றாவது வாரத்தில் 350 தியேட்டர்களாக அதிகரித்ததாக தயாரிப்பு நிறுவனமும் அறிவித்தது. இன்றும் நாளையும் படம் நன்றாக வசூலித்தால் அடுத்த வாரத்தில் வசூல் 100 கோடியைத் தாண்டும் என திரையுலகத்தில் சொல்கிறார்கள். அப்படி நடந்தால் கார்த்தியின் முதல் 100 கோடி படமாக 'கைதி' படம் அமையும்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
ஆக்ஷன் எனது கனவு படம்: சுந்தர்.சிஆக்ஷன் எனது கனவு படம்: சுந்தர்.சி 'பிகில்' - வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் வருமா ? 'பிகில்' - வினியோகஸ்தர்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

mindum vasantham - madurai,இந்தியா
10 நவ, 2019 - 10:05 Report Abuse
mindum vasantham பீகிள் காத்து வாங்குகிறது
Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
09 நவ, 2019 - 17:37 Report Abuse
எதிர்க்குரல் நீதி ,உரிமை, சுதந்திரம் இவைகள் கேட்டு பெறுபவை அல்ல எடுத்து கொள்வது சிறு வயதிலே படித்ததும் பிடித்ததுமான பொன் மொழி இதுதான் வல்லான் வகுத்ததே வாய்க்கால். சம்பந்தர் சமணர்களுக்கு ஒரு பாடம் கற்பித்தார் அந்த பாடம் இப்போது சிலருக்கு தேவை
Rate this:
09 நவ, 2019 - 15:08 Report Abuse
chandran sir really good film Kaithi
Rate this:
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
09 நவ, 2019 - 13:08 Report Abuse
TAMILAN சூர்யாவும், கார்த்திக்கும் ஒழுக்கமானவர்களாக வளர்க்கப்பட்டதால் கடவுளும், மக்களும் அவர்கள் பக்கம், சூர்யாவும் கார்த்திக்கும் நிஜத்தில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பாரம்பரிய (செயற்கை உரம் போடாத ) விவசாயத்தை ஊக்குவித்து வருகின்றார்கள். மாணவர்களுக்கான அறக்கட்டளையை நடத்தி பல ஏழை மாணவர்களுக்கு கல்வி குடுத்து ஊக்குவித்து வருகின்றார்கள். பேசுவது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருக்கும் விஜயை விட இவர்கள் ஆயிரம் மடங்கு மேல். அடுத்த சூப்பர் ஸ்டார் , சூர்யா அல்லது கார்த்தி தான் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in