Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆக்ஷன் எனது கனவு படம்: சுந்தர்.சி

09 நவ, 2019 - 12:04 IST
எழுத்தின் அளவு:
Action-is-my-dream-project-says-Sundar-C

விஷால் நடித்த படங்களிலேயே பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம் ஆக்ஷன். சுந்தர்.சி இயக்கி உள்ளார். விஷால், தமன்னா, அகன்ஷா பூரி, சாயாசிங், ஐஸ்வர்யா லட்சுமி, ராம்கி, கபீர் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார். இது வெளிநாட்டில் தயாராகி உள்ள ஆக்ஷன் படம். இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு சுந்தர்.சி.பேசியதாவது:

முதன்முதலாக நான் எடுத்த படம் கிராம பின்னணி கொண்டது. படத்தைப் பார்த்த அனைவரும் இது உன்னுடைய படம் மாதிரி இல்லையே? என்றார்கள். இந்த கேள்வியை நான் ஒவ்வொரு படத்திலும் சந்தித்தேன். அப்படி என்றால் எது தான் என்னுடைய படம்? என்னுடைய படமென்றால் எந்த பாணியில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்? என்று குழப்பமடைந்தேன். இப்போது சொல்கிறேன். இதுதான் என்னுடய படம். இதுதான் எனது பாணி. என்னுடைய கனவு படம்.

படம் முழுக்க ஆக்ஷன் தான். விஷாலும், தமன்னாவும் டூப் போடாமல் உயிரை பணயம் வைத்து நடித்திருக்கிறார்கள். அகன்ஷாவை ஒரு நிகழ்ச்சியில் பார்த்துதான் தேர்ந்தெடுத்தோம். விஷாலுக்கு பெண் வேடமிட்டால் அகன்ஷா மாதிரி தான் இருப்பார். அவரும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தனர். தமன்னா, அகன்ஷா இருவரும் தினமும் படப்பிடிப்பு முடிந்து போகும்போது காயத்தோடு தான் போவார்கள்.

ஐஸ்வர்யா லக்ஷமி இப்படத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் அவர் நடித்த எல்லா படமும் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழில் அவருக்கு இது முதல் படம். இப்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சாயாசிங் சில காட்சிகளில் வந்தாலும் கண்ணியமாக நடித்திருப்பார். லட்சுமிகரமாக இருக்க வேண்டும், அனைவரின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என கூறியதும், சிறு புன்னகையுடன் ஒப்புக் கொண்டார்.

எனக்கு பக்க பலமாக இருந்தது தேசிய விருது பெற்ற சண்டை இயக்குனர்களான அன்பறிவு தான். இந்த பட வாய்ப்பை ஹிப்ஹாப் ஆதிக்கு கொடுக்க கூடாது என்றிருந்தேன். ஆனால், என்னிடமிருந்து இசையமைப்பாளர் வாய்ப்பைப் பிடுங்கிச் சென்று இசையமைத்தார். நான் நினைத்ததைவிட வேகமாக தன் பணியை முடித்துவிட்டார் ஆதி. ராணுவம், தீவிரவாதம், அரசியல் என்று அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது. இப்படத்தில் வில்லன் யார் என்பது தான் சஸ்பென்ஸ். அது படம் பார்க்கும்போதுதான் தெரியும்.

தமன்னாவை எனக்கு பிடிக்கும். எனது ஒவ்வொரு படத்திலும் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். அது இப்படத்தில்தான் நிறைவேறியது. 'பாகுபலி' படத்தில் தமன்னாவின் சண்டைக் காட்சிகளைப் பார்த்தேன். அவர்தான் இந்த படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரை நடிக்க வைத்தேன். இப்படத்தின் கிராபிக்ஸ் பணி செய்த அனைவருமே சென்னையைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தான். சென்னையில் இந்தளவு உயர்தரமான காட்சிகளைக் கொடுக்க முடியுமா? என்ற அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்.

விஷால் இயக்குநரின் நடிகர். ஒருமுறை அவர் ஒப்பந்தம் செய்துவிட்டால் நாம் என்ன சொல்கிறோமோ அதை அர்ப்பணிப்போடு செய்வார். விஷாலைத் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட பெரிய திரைப்படத்தை 6 மாத காலங்களிலேயே முடித்திருக்க முடியாது. என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி, கமல் வழியை விஜய், அஜித் பின்பற்றுவார்களா ?ரஜினி, கமல் வழியை விஜய், அஜித் ... ரூ.100 கோடியை நெருங்கும் 'கைதி' வசூல் ரூ.100 கோடியை நெருங்கும் 'கைதி' வசூல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in