Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி, கமல் வழியை விஜய், அஜித் பின்பற்றுவார்களா ?

09 நவ, 2019 - 11:51 IST
எழுத்தின் அளவு:
Did-Ajith---Vijay-follow-Rajini---Kamal

தமிழ்த் திரையுலகில் கடந்த சில தினங்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரைப் பற்றித்தான் பேச்சுக்கள் அதிகம். மீடியாக்களும் அவர்களைப் பற்றிய செய்திகளை கடந்த சில தினங்களாக அதிகமாகவே வெளியிட்டன.

கமல்ஹாசன் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஒன்றாக ரஜினி, கமல் ஆகியோரது குருநாதரான மறைந்த இயக்குனர் .கே.பாலசந்தர் சிலை திறப்பு விழா கமல்ஹாசனின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அப்போது பேசிய ரஜினிகாந்த் 'அபூர்வ சகோதரர்கள்' படம் பார்த்துவிட்டு கமல்ஹாசன் தன்னைவிட வயதில் கொஞ்சம் சிறியவர் இல்லையென்றால் அவரது காலில் விழுந்திருப்பேன் என்று பாராட்டிப் பேசினார்.

அதேப்போன்று கமல் பேசுகையில், எந்த சூழலிலும் நாம் ஒருவருக்கு ஒருவர் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும், பேச வேண்டும் என ரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டார் என்றார்.

இரு தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டார். இரு நடிகர்களும் சக போட்டியாளர்களாக இருந்தாலும் அவர்களது நட்பை இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர்களுக்கு இடையே தனிப்பட்ட முறையில் எந்த ஒரு தாக்குதல் முறையையும் அவர்கள் இருவருமே கடை பிடித்ததில்லை. திரையுலகில் நட்புக்கு இலக்கணமாய் இருக்கிறார்கள்.

ரஜினி, கமலைப் போல இன்றைய முன்னணி நடிகர்களான விஜய், அஜித் ஏதாவது ஒரு விழாவில் ஒன்றாக அமர்ந்து இருவரும் ஒருவரை மற்றவர் பாராட்டிப் பேசிக் கொண்டாலே அவர்களது ரசிகர்களுக்கு இடையில் இருக்கும் சண்டைகள் சமூக வலைத்தள சர்ச்சைகள் நிறையவே குறைந்து போகும்.

அப்படி ஒரு வாய்ப்பை விஜய்யும், அஜித்தும் தான் அவர்களது ரசிகர்களுக்காக உருவாக்கிக் கொள்ள வேண்டும். தங்களது ரசிகர்களின் சண்டையில் குளிர் காயாமல் சினிமாவின் நல்லதுக்காகவும் அவர்கள் இருவரும் அதைச் செய்வார்களா?.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் தென்னவன் உடல்நிலை கவலைக்கிடம்: காப்பாற்ற டாக்டர் தீவிர முயற்சிநடிகர் தென்னவன் உடல்நிலை ... ஆக்ஷன் எனது கனவு படம்: சுந்தர்.சி ஆக்ஷன் எனது கனவு படம்: சுந்தர்.சி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

sanu -  ( Posted via: Dinamalar Android App )
10 நவ, 2019 - 09:24 Report Abuse
sanu RAJINI AND KAMAL ARE FROM K.BALACHANDERS SCHOOL. SO ONLY THEY ARE LIKE THIS. BUT VIJAY AND AJITH CAME FROM WHERE? SO THEY WILL NOT BE FRIENDS
Rate this:
Sathish -  ( Posted via: Dinamalar Android App )
09 நவ, 2019 - 22:13 Report Abuse
Sathish என்னது அவங்க தூண்டி விட்டு குளிர் காய்றாங்களா!!!? அதுசரி...☺ மோதலுக்கு காரணமே பத்திரிக்கைகாரங்கதான்,சாதாரண விஷயத்தை பெரிதாக்கி மோதலை ஏற்படுத்துகின்றனர்!
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
09 நவ, 2019 - 19:50 Report Abuse
mindum vasantham விஜய் , அஜித் திறமை கமல் ரஜினி அளவில் இல்லை
Rate this:
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
09 நவ, 2019 - 19:15 Report Abuse
TAMILAN சூர்யாவும், கார்த்திக்கும் ஒழுக்கமானவர்களாக வளர்க்கப்பட்டதால் கடவுளும், மக்களும் அவர்கள் பக்கம், சூர்யாவும் கார்த்திக்கும் நிஜத்தில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பாரம்பரிய (செயற்கை உரம் போடாத ) விவசாயத்தை ஊக்குவித்து வருகின்றார்கள். மாணவர்களுக்கான அறக்கட்டளையை நடத்தி பல ஏழை மாணவர்களுக்கு கல்வி குடுத்து ஊக்குவித்து வருகின்றார்கள். பேசுவது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருக்கும் விஜயை, matrum ajithai விட இவர்கள் ஆயிரம் மடங்கு மேல். அடுத்த சூப்பர் ஸ்டார் , சூர்யா அல்லது கார்த்தி தான் .
Rate this:
Domban -  ( Posted via: Dinamalar Android App )
09 நவ, 2019 - 17:50 Report Abuse
Domban விஜய் மற்றும் அஜித் ...இருவருமே மறைமுக கொம்பு சீவல்களை செய்கின்றனர் ...இதன் காரணமாகவே ரசிகர்கள் சண்டையிட்டு கொள்கின்றனர் ...
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in