Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் தென்னவன் உடல்நிலை கவலைக்கிடம்: காப்பாற்ற டாக்டர் தீவிர முயற்சி

09 நவ, 2019 - 10:46 IST
எழுத்தின் அளவு:
Actor-Thennavan-in-critical

பாரதிராஜா இயக்கிய என்னுயிர் தோழன் படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமானவர் தென்னவன். அதன் பிறகு விருமாண், சண்டக்கோழி படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகு பல படங்களில் வில்லன், மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வந்தார். நேற்று வெளியான பட்லர் பாலு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ராசாத்தி என்ற சின்னத்திரை தொடரிலும் நடித்து வந்தார்.

52 வயதான தென்னவனுக்கு எந்த நோயும் இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று பயங்கர தலைவலியால் துடித்தார். உடனடியாக அவரை சென்னை பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது மூளையில் கட்டி ஒன்று வளர்ந்திருப்பதை கண்டுபிடித்தனர்.

இது எந்த விதமாக கட்டி என்பதை டாக்டர்களால் உறுதி செய்ய முடியவில்லை. இதற்கிடையில் தென்னவன் உடல்நிலை மேலும் மோசமானதால் அவசர சிகிகச்சை பிரிவில் அவருக்கு சிசிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. என்றாலும் அவரது உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தென்னவனை காப்பாற்ற டாக்டர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் சங்க சிறப்பு அதிகாரி நியமனத்துக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்புநடிகர் சங்க சிறப்பு அதிகாரி ... ரஜினி, கமல் வழியை விஜய், அஜித் பின்பற்றுவார்களா ? ரஜினி, கமல் வழியை விஜய், அஜித் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10 நவ, 2019 - 01:58 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் விரைவில் உடல்நலம் பெற்று கலைப்பணியை தொடர்வீர்கள். நிச்சயம்..
Rate this:
Ramesh - Fremont-California,யூ.எஸ்.ஏ
10 நவ, 2019 - 00:44 Report Abuse
Ramesh நல்ல நடிகர்...நலமுடன் வருவார்
Rate this:
LAX - Trichy,இந்தியா
09 நவ, 2019 - 22:27 Report Abuse
LAX 'விருமாண்' ன்ற படம் விருமாண்டி படத்துக்கு முன்னாடி வந்ததா செய்தியாளரே..? அல்லது விருமாண்டி படத்தைத்தான் 'டி' போடாம மரியாதையா குறிப்பிட்டுருக்கீங்களா..?
Rate this:
LAX - Trichy,இந்தியா
09 நவ, 2019 - 22:24 Report Abuse
LAX நடிகர் தென்னவன் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையளிப்பில் உடல் நலம்பெற்று வீடு திரும்ப கடவுளிடம் ப்ரார்த்தனைகள்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in