Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன் ரஜினி

08 நவ, 2019 - 13:56 IST
எழுத்தின் அளவு:
I-will-act-till-start-party-says-Rajini

அரசியல் கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கே.பாலசந்தரின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய ரஜினி, செய்தியாளர்களை சந்தித்தார்.

திருவள்ளுவர் மிகப்பெரிய ஞானி. சித்தர். ஞானிகள், சித்தர்களை மதம் ஜாதி எல்லைக்குள் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு அப்பாற்பட்டவர்கள். திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவரது குறள் மூலம் தெரியும். அவர் நாத்திகர் அல்ல. ஆத்திகர். இதை யாரும் மறக்க முடியாது. மறுக்கவும் முடியாது.

திருவள்ளுவருக்கு பா.ஜ., காவி உடை அணிவித்தது அவர்களது தனிப்பட்ட விஷயம். ஊரில் நிறைய பிரச்னை இருக்கும் போது, இந்த விவகாரத்தை பற்றி பேசுவது அற்பத்தனமானது. தேவையற்றது. எனக்கு விருது அளித்தவர்களுக்கு நன்றி. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. பாஜவில் சேரவோ, தலைவராக்கவோ இருக்கும்படி யாரும் அழைக்கவில்லை. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சி நடப்பது போல் எனக்கும் பூச முயற்சி நடக்கிறது. இதில் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார். நானும் மாட்டிக் கொள்ள மாட்டேன் என்றார்.

பின்னர் சற்றுநேரம் கழித்து மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, நான் எப்போதும் வெளிப்படையாக பேசுவேன். சிலர் மட்டுமே எனக்கு பா.ஜ., சாயம் பூச முயல்கின்றனர், அது நடக்காது. திருவள்ளுவருக்கு காவி உடையை பா.ஜ., டுவிட்டர் பக்கத்தில் மட்டும் போட்டது. வேறு எங்கும் போட வேண்டும் என சொல்லவில்லை. ஆனால், மீடியாக்கள் தான், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தின. என்னை ஒரு கட்சிக்கு வருமாறு அழைப்பது அவர்களின் விருப்பம்.

அயோத்தி விவகாரத்தில் தீர்ப்பு எப்படி வந்தாலும், அனைவரும் அமைதி காக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ளது. இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டுமோ, அந்த பணியை மத்திய அரசு செய்ய வேண்டும். சினிமாவில் தொடர்ந்து கூட நடிப்பேன். அரசியல் கட்சி அறிவிக்கும் வரை நடிப்பேன். தமிழகத்தில் தலைமைக்கு இப்போதும் வெற்றிடம் உள்ளது என கூறினார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
லாக்கப் படப்பிடிப்பு நிறைவுலாக்கப் படப்பிடிப்பு நிறைவு பொன்னியின் செல்வன்: டிசம்பரில் தாய்லாந்து பறக்கும் மணிரத்னம் பொன்னியின் செல்வன்: டிசம்பரில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

09 நவ, 2019 - 07:32 Report Abuse
ravichandranl இந்த டுபாக்கூர் சாகும் வரை நடிப்பார் கட்சி தொடங்க மாட்டார். இவர் தொடங்கினாலும் இவர் பொண்டாட்டி விடமாட்டார். எல்லாம் படம் போனியாக செய் நாடகம்.
Rate this:
SUBRAMANIAN P - chennai,இந்தியா
08 நவ, 2019 - 20:52 Report Abuse
SUBRAMANIAN P அவரு கட்சி தொடங்க என்ன அவசியம்? தமிழ்நாட்டுல வேற யாரும் கண்ணுக்குத்தெரியாலயா? ஏன் ஒரு ஆளை பிடிச்சி தொங்கிகிட்டு இருக்கீங்க.
Rate this:
08 நவ, 2019 - 19:53 Report Abuse
ஆனந்தி கருப்பு தங்கம் மாமனிதர் காமராஜர் அண்ணா மற்றும் அப்துல் கலாம் வாழ்ந்த பூமி இது காமராஜர் போல வாழ்ந்து காட்டுங்க பின்னர் அரசியலில் வருவது பற்றி யோசிக்கலாம்
Rate this:
08 நவ, 2019 - 18:44 Report Abuse
vijiyakumar Ys......katchi thodangiyathum makkalidam nadipen.....very simple....
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
08 நவ, 2019 - 18:31 Report Abuse
shoba he is very clear in his stand.that means he wont come to politics...
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in