ஆகஸ்ட் மாதமே திரைக்கு வரும் ரஜினியின் ஜெயிலர் | கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார் | காஷ்மீரில் நில அதிர்வு : சென்னை திரும்பிய விஜய் | மகனை தொடர்ந்து அப்பாவை இயக்கும் மாரி செல்வராஜ் | கிரிக்கெட் பயிற்சியில் ‛அட்டகத்தி' தினேஷ் | ஜீவா - அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் | லியோ படத்தில் நடிக்கிறாரா யு-டியூப்பர் இர்பான்? | ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் இணையும் பான் இந்திய படம் | மீண்டும் கதை நாயகியான அபிராமி | டி.வி.யில் நேரடியாக வெளியாகும் ஆரி படம் |
நடிகர் நிதின் சத்யா தயாரிப்பாளராகி ஜெய் நடிப்பில் ஜருகண்டி என்ற படத்தை தயாரித்தார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது வைபவ், வாணி போஜன் நடிப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இதில் வெங்கட் பிரபு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவர்கள் தவிர பூர்ணா, ஈஸ்வரி ராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒரு கைதிக்கும், போலீஸ் அதிகாரிக்கும் நடக்கிற ஆக்ஷன், த்ரில்லர் கதை.
மோகன் ராஜா உதவியாளர் சார்லஸ் இயக்குகிறார். அரோல் குரோலி இசை அமைக்கிறார். சாண்டி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து அதற்கு பிந்தைய பணிகள் வேகமாக நடந்து வருகிறது. படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமல் இருந்தது. சமீபத்தில் வெளிவந்த கைதி படம் வெற்றி பெற்றிருப்பதாலும், அந்த படத்தின் சாயலில் இந்தப் படம் உருவாகி இருப்பதாலும் படத்திற்கு லாக்கப் என்று டைட்டில் வைத்துள்ளனர். ஜனவரி மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.