Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் ஜனாதிபதி ஆக வேண்டும்: நடிகர் பிரபு

07 நவ, 2019 - 22:13 IST
எழுத்தின் அளவு:
Actor-Prabhu-speaks-about-Kamal-haasan

நடிகர் கமல் பிறந்தநாளான இன்றுதான், அவருடைய தந்தை சீனிவாசன் மறைந்த தினம். ஆகவே, அவருக்கு, பரமக்குடியிலுள்ள அவர்களது சொந்த இடத்தில் சிலை அமைக்கப்பட்டது.


இன்று நடைபெற்ற சிலை திறப்பு விழாவில், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தார். மேலும், அங்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் அமைக்கப்பட்ட திறன்வளர் மேம்பாட்டு பயிற்சி மையத்தையும் துவங்கி வைத்தார். அதன்பின், தெளிச்சாநல்லூரியில் நடந்த கமல் பிறந்த நாள் விழாவில் நடிகர் பிரபு கலந்து கொண்டார்.


அப்போது, அவர் பேசியதாவது: நடிகர் கமல் மீது, அப்பா சிவாஜி மீது அளவு கடந்த பிரியம் உள்ளது. எனக்கு திரையுலகு வாரிசு என்றால், அது நடிகர் கமல் மட்டும் தான் என சிவாஜி கூறுவார். தன்னை விட, நடிகர் கமலுக்கு சினிமா தொழில்நுட்பம் தெரியும் என்றும் அடிக்கடி சொல்வார். அன்பால் அவரை அடித்து துவைத்து விடலாம். ஏனெனில், அன்புக்கு அவர் அடிமை. நடிகர் கமலை ஜனாதிபதியாக பார்க்க வேண்டுமென திருமதி சாருஹாசன் சொன்னார்கள். அவருடைய தம்பிகளுக்கு எல்லாம் அவரை ஜனாதிபதியாக பார்க்க வேண்டும் என்பதுதான் ஆசை. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அரசின் உத்தரவு: நடிகர் சங்கம் எதிர்ப்பு, வழக்கு தொடர முடிவுஅரசின் உத்தரவு: நடிகர் சங்கம் ... கோலிவுட்டில் முகாமிட்ட நடிகை! கோலிவுட்டில் முகாமிட்ட நடிகை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in