Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசின் உத்தரவு: நடிகர் சங்கம் எதிர்ப்பு, வழக்கு தொடர முடிவு

07 நவ, 2019 - 19:00 IST
எழுத்தின் அளவு:
TN-Government-order:-Nadigar-Sangam-oppose

நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு, இதை சட்ட ரீதியாகவும் எதிர் கொள்ள தயாராகி வருகின்றனர். அரசின் உத்தரவுக்கு தடை கோரி வழக்கு தொடர உள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் முடிந்தும் ஓட்டுகள் எண்ணப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சங்கம் சரியாக செயல்படவில்லை என கூறி சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி.கீதா என்பவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு நடிகர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் அரசின் உத்தரவை எதிர்த்து துணை நடிகர்கள் பலர் ஆர்ப்பாட்டமும் செய்தனர். இந்நிலையில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அவர்கள் கூறுகையில், சட்டப்படி ஜனநாயக முறையில் தேர்தலை எதிர்கொண்டோம், இப்போதும் சட்ட ரீதியாக தான் செயல்பட்டு வருகிறோம். 4 பேர் கொடுத்த புகாரின் பேரில் 3,000 பேர் கொண்ட சங்கத்திற்கு எதிராக அதிகாரியை நியமித்துள்ளனர். இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளோம். நாளை வழக்கு தொடர உள்ளோம்.

ஆகஸ்ட் மாதம் வரை அனைவருக்கும் பென்ஷன் அனுப்பப்பட்டுள்ளது, சங்கம் செயல்படவில்லை என கூறுவது தவறு. இந்த பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சரை சந்திப்போம். ராதாரவி பதவி காலத்தில் சங்கத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. ஆனால் அப்போது, அரசு சிறப்பு அதிகாரியை நியமிக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மம்முட்டியால் முடியும்போது என்னால் முடியாதா: ரகுமான் அசத்தல்மம்முட்டியால் முடியும்போது என்னால் ... கமல் ஜனாதிபதி ஆக வேண்டும்: நடிகர் பிரபு கமல் ஜனாதிபதி ஆக வேண்டும்: நடிகர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in