விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
கமல்ஹாசன் இயக்கம், தயாரிப்பில் 2000ம் ஆண்டில் வெளிவந்த படம் ஹே ராம். இப்படத்தில் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், ஹேமமாலினி, அதுல் குல்கர்னி உட்பல பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
காந்தியடிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து அதன் பின்னணியில் ஒரு கற்பனைக் கதையை உருவாக்கி இந்தப் படத்தின் கதையை எழுதியிருந்தார் கமல்ஹாசன். படம் வெளிவந்து பலத்த விமர்சனங்களைச் சந்தித்தது. பலரும் படத்தைப் பார்த்துவிட்டு புரியவில்லை என்று தான் சொன்னார்கள். இருந்தாலும் அந்தப் படம் கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்த படங்களில் சிறந்த படமாக அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள்.
அப்படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றை கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை(நவ., 7) சென்னை சத்யம் தியேட்டரில் திரையிட உள்ளார்கள். அதற்காக அந்தப் படத்திற்கு புதிய டிரைலர் ஒன்றை உருவாக்கி அதை யு-டியுபில் வெளியிட்டுள்ளார்கள். இதற்கடுத்து படம் மீண்டும் சில தியேட்டர்களில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
அதோடு, கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தையும் மீண்டும் தியேட்டர்களில் திரையிட உள்ளார்கள். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
Haven't seen the trailer launch of #HeyRam then, here is your chance to recreate that magic.
Enjoy the trailer and let's be prepared for the magnum opus.#HeyRamSplScreeningOn8Nov #Gandhi150 #150yearsofMahatmaGandhi https://t.co/aEit0LL76A
— Raaj Kamal (@RKFI) November 6, 2019