இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது | சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் - விஜய் தேவரகொன்டா | தோல்விப் பட வரிசையில் அக்ஷய்குமாரின் 'ரக்ஷா பந்தன்' | வெள்ளித்திரையில் ‛விடுதலை' வேட்கை | இன்னும் ஓராண்டாகும் : ‛சலார்' புது ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்குப் படத்தை நிறுத்திவிட்டு வருகிறாரா ஷங்கர்? | திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா | ‛திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்த தனுஷ் |
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் 'தர்பார்'.
இப்படத்தின் மோஷன் போஸ்டரை இன்று(நவ.,7) வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். நேற்று அந்த மோஷன் போஸ்டரை யார் யார் வெளியிடப் போவதாக அறிவிப்பு வெளியானது. அதில் தமிழ், தெலுங்கு போஸ்டரை கமல்ஹாசன், மலையாளப் போஸ்டரை மோகன்லால், ஹிந்தி போஸ்டரை சல்மான்கான் வெளியிடப் போவதாக அறிவித்தார்கள்.
இப்போது அதில் ஒரு சிறிய மாற்றம். தெலுங்கு போஸ்டரை கமல்ஹாசனுக்குப் பதிலாக நடிகர் மகேஷ் பாபு வெளியிடப் போவதாக இன்று(நவ.,7) திடீரென அறிவித்துள்ளார்கள். இன்று மாலை 5.30 மணிக்கு அவரவர் டுவிட்டர் தளங்களில் 'தர்பார்' மோஷன் போஸ்டரை வெளியிடுகிறார்கள்.