பிரபல பின்னணி பாடகரின் தந்தை வீட்டில் 72 லட்சம் திருட்டு | மார்ச் 29ல் ‛பொன்னியின் செல்வன் 2' டிரைலர் ரிலீஸ் | 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சத்யராஜ் - ஷோபனா | கீர்த்தி சுரேஷின் பாட்டில் சேலஞ்சை நிறைவேற்றிய நானி - ராணா | நிதின் - ராஷ்மிகா படத்தை துவக்கி வைத்த சிரஞ்சீவி | அப்பா பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ் | ஐஸ்வர்யா ரஜினியிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டம் | செல்பி : போலீசாருக்காக காரை விட்டு இறங்கி வந்த ரஜினி | மும்பையில் குடியேறிய சூர்யா? | மூளையில் ரத்தக்கசிவு : லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அட்மிட் |
தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் பேண்டஸி படங்கள், பெரிதாக கவனம் ஈர்க்கின்றன. அப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ஆலம்பனா படம் எடுக்கப்படுவதாக படக் குழு தெரிவித்திருக்கிறது.
அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை, குழந்தைகளும் குடும்பங்களும் ரசித்து பார்த்து மகிழ்ந்த்சிருக்கின்றன. அப்படியொரு அபூர்வ கதையம்சத்தில், இன்றுள்ள குழந்தைகளுக்கும்; இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில், ஆலம்பனா படம் தயாராவதாகவும் படக் குழு அறிவித்திருக்கிறது.
விஸ்வாசம் படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும், தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து, ஆலம்பனா படத்தைத் தயாரிக்கின்றனர். முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக இப்படத்தை எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய்.
இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர். நடிகர் வைபவ், ஆலம்பனா படத்தில் ஹீரோவாக நடிக்க, ஜோடியாக பார்வதி நடிக்கிறார். படத்தில் முனிஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, திண்டுக்கல் ஐ லியோனியும் நடிக்கிறார். வேதாளம் படத்தில் வில்லனாக மிரட்டிய கபீர்துபான் சிங் வில்லன் வேடமேற்றிருக்கிறார். ஆலம்பனா படத்தை, அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக் குழு திட்டமிட்டிருக்கிறது.