Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சூட்கேஸ் கைப்பிடி, சக்கரங்களை உடைப்பு: சோனாக்ஷி கோபம்

06 நவ, 2019 - 12:04 IST
எழுத்தின் அளவு:
Sonakshi-Sinha-Slams-Airline-For-Damaging-Her-Luggage

இண்டிகோ விமான ஊழியர்கள் உடைக்க முடியாததையும் உடைத்து விட்டார்கள் என பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் படத்தில் அறிமுகம் ஆனவர் பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா. தொடர்ந்து அவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வரும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால், வரவில்லை. இந்நிலையில், அவர் சமீபத்தில் இண்டிகோ விமானத்தில் தன்னுடைய உடைக்க முடியாத சூட்கேசுடன் பயணித்தார்.

விமானப் பயணம் முடிந்து, சூட்கேசை பெற்றவருக்கு அதிர்ச்சி. சூட்கேசில் இருந்த கைப்பிடி, சக்கரங்கள் உடைந்து நொறுங்கி இருந்தன. உடைக்க முடியாத இவைகளை உடைத்து விட்டீர்களே என, அப்போதே விமான ஊழியர்களிடம் கொந்தளித்தார் நடிகை சோனாக்ஷி. வீடு திரும்பியவர், சூட்கேஸ் உடைந்ததால் ஏற்பட்ட மன வருத்தத்தில் இருந்தவர், தன்னுடைய மனக் குறைகளில் டுவிட்டரில் பதிவாக்கினார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய சூட்கேஸ் உடைக்க முடியாதவையாக இருந்தது. அதை விமான ஊழியர்கள் எப்படி உடைத்தார்கள் என தெரியவில்லை. கைப்பிடியையும், சக்கரங்களையும் உடைத்திருக்கின்றனர். உடைக்க முடியாத சூட்கேஸில் இதையெல்லாம் உடைத்த விமான ஊழியர்களுக்கு என்னுடைய நன்றி என கூறியிருக்கிறார்.

அதை வீடியோவாக்கி, அதையும் ட்விட்டர் பதிவோடு இணைத்து விட, இண்டிகோ நிறுவனத்துக்கு எதிராக பலரும் கொந்தளிக்கின்றனர். தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையெல்லாம் பதில் ட்விட்டர் மூலம் பதிவிட்டு வருக்கின்றனர்.

இதையடுத்து, சோனாக்ஷியைத் தொடர்பு கொண்ட இண்டிகோ நிறுவன பணியாளர்கள், உங்கள் பிரச்னையை ஆராய குழு அமைத்திருக்கிறோம். அவர்கள் விசாரித்து வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் தகவலுக்குப் பின், உங்களைத் தொடர்பு கொள்கிறோம். உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்காக வருந்துகிறோம். விரைவில் எங்கள் நிறுவனத்தில் இருந்து முழுமையான விவரங்களுடன் தொடர்பு கொள்வர் என கூறி உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பெண் இயக்குனர் படத்தில் ரகுல் பிரீத் சிங்பெண் இயக்குனர் படத்தில் ரகுல் ... சிறுவனை திட்டிய நடிகை ஸ்வராவுக்கு அர்ச்சனை சிறுவனை திட்டிய நடிகை ஸ்வராவுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Endrum Indian - Kolkata,இந்தியா
07 நவ, 2019 - 16:49 Report Abuse
Endrum Indian இதுக்குத்தான் சொல்றது 60% டிஸ்கோவுண்ட் என்று சொல்லி வாங்கக்கூடாது என்று ???இப்போவாவது புரிஞ்சுதா சோனாட்சி??
Rate this:
Nathan - Hyderabad,இந்தியா
07 நவ, 2019 - 16:40 Report Abuse
Nathan ஹாஹா, இதெல்லாம் சர்வ சாதாரணம். ஏர் பிரான்ஸ் கூட என் ஹார்ட் பிளாஸ்டிக் பெட்டியை கைப்பிடி சக்கரம் காலை உடைத்தே கொடுத்தது. இதெல்லாம் ட்ராவலில் சகஜம் தங்கக்கண் (சோனாக்ஷி) பெண்ணே.
Rate this:
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
06 நவ, 2019 - 20:58 Report Abuse
babu She is so poor that she cant buy another suitcase. Drama itch.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in