Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் செய்த மிகப் பெரிய தவறு: இன்றும் வருந்தும் நயன்தாரா

05 நவ, 2019 - 19:16 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-reveals-her-biggest-mistake-in-life

நடிகை நயன்தாரா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களாக பார்த்துப் பார்த்து நடித்து வருகிறார். கடந்த பதினைந்து ஆண்டு காலத்துக்கும் மேலாக, தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகை நயன்தாரா.

சமீபத்தில் வோக் பத்திரிகையில் அட்டைப்படத்தில் இடம் பெற்ற அவர், அந்த பத்திரிகைக்கு பேட்டியும் கொடுத்திருந்தார். வோக் பத்திரிகையில் பேட்டி இடம் பெற்றதோடு, அட்டையில் இடம் பிடித்த முதல் தென்னிந்திய நடிகை என்ற பெயரையும் பெற்றார்.

ஆனால், அவர் பத்திரிகைகள் எவற்றுக்கும் பேட்டி கொடுக்காததோடு, திரைப்படங்களுக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். அதை ஒரு பாலிசியாகவே அவர் கடை பிடித்து வருகிறார்.

இந்நிலையில், தனியார் வானொலி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய திரையுலக வரலாற்றில் நான் ஒரு பெரிய தவறை செய்திருக்கிறேன். அது, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் நடித்தது தான். அதில் சித்ரா என்ற மருத்துவக் கல்லூரி மாணவி கேரக்டர் எனக்கு வழங்கப்பட்டது. அந்தக் கேரக்டரில் எல்லாம் எந்தத் தவறும் கிடையாது. ஆனால், படத்தில் நான் கமிட்டாவதற்கு முன், என்னிடம் சொல்லப்பட்ட கதைக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை. என்னுடைய கேரக்டர் குறித்து சொல்லப்பட்டதற்கும் படமாக்கப்பட்டதற்கும் தொடர்பில்லை.

இதனால், நான் முழுமையாக ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். அதனால்தான், நான் ஒவ்வொரு படத்திலும் கமிட் ஆவதற்கு முன், நிறைய விஷயங்களில் கெடுபிடி காட்டுகிறேன். ஏனென்றால், சொல்வதற்கு மாறாக, பின்நாட்களில் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான். சொல்லப் போனால், அது ஒரு முன்னெச்சரிக்கையான நடவடிக்கைதான். அதனால், நான் கெடுபிடிக்காரி என்று சொன்னால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். நான் தொடர்ந்து இப்படித்தான் இருப்பேன். நான் படங்களில் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு, இந்த கெடுபிடியும் ஒரு காரணம்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
யாருடன் இணையப் போகிறார் அஜித்?யாருடன் இணையப் போகிறார் அஜித்? கார்த்தி, விஜய்யை அடுத்து கமல்: ‛லக்கி' லோகேஷ் கனகராஜ் கார்த்தி, விஜய்யை அடுத்து கமல்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

V.B.RAM - bangalore,இந்தியா
06 நவ, 2019 - 15:57 Report Abuse
V.B.RAM நான்கூட ஏதோ தனுஷ் மற்றும் பிரபுதேவாவை படுத்துவிட்டு ஏமாற்றியதை பற்றி எனநினைதேன்
Rate this:
oce - tokyo,ஜப்பான்
06 நவ, 2019 - 00:21 Report Abuse
oce தவறை தெரியாமல் தவறாக செய்வது. பின் வருந்துவது. பட்டறிவுக்கு வேலை கொடுக்கவில்லை.
Rate this:
06 நவ, 2019 - 00:00 Report Abuse
Viji Viji அப்போ 10 பேர் கூட போனத பத்தி சொல்லலியா
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
06 நவ, 2019 - 08:12Report Abuse
Vijayகிறுக்கு பயலே உனக்கு என்னடா . படித்தோம் ரசித்தோமா என்று உன் குடும்பத்தை கவனி .....
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
05 நவ, 2019 - 23:33 Report Abuse
Vena Suna Rest எடுமா..44 வயசு ஆயிடுச்சி..
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
05 நவ, 2019 - 20:13 Report Abuse
Pannadai Pandian the bad thing that you did is LIVING TOGETHER WITH PRABU DEVA AND SPOILING ONE FAMILY. The good thing that you have is inclination towards HINDUISM.
Rate this:
Vetri Vel - chennai,இந்தியா
06 நவ, 2019 - 01:49Report Abuse
Vetri Velஏன்டா பன்னாடை...பிரபு தேவா ஒரு கிருஷ்ணர் அவதாரம் னு இந்த அம்மா கணக்கு போட்டிடுச்சு... உனக்கு ஏன்...? பக்கத்துக்கு வீட்டு ஜன்னல்ல எட்டி பார்ப்பதே பிழைப்பு.. சீனா ல சிங்கி அடிக்கலியா ..?...
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
06 நவ, 2019 - 06:27Report Abuse
Pannadai Pandianya unaku ippadi ammani mela paasam ponguthu, root vuduriya ???? kidaikkathu…....
Rate this:
Believe in one and only God - chennai,இந்தியா
08 நவ, 2019 - 15:06Report Abuse
Believe in one and only Godஇவளை தவறு செய்ய வைத்ததே ஹிந்துயிசம். பிரபாதேவாவிற்காக மதம் மாறி, இப்போ தகுதி இல்லாத ஒருவனை காதலித்து கொண்டு இருக்கிறார். திருமணம் முடிந்தால், அழிவு தான் காத்து கொண்டிருக்கிறது. தனது தவறை திருத்தி கொண்டு, சினிமா வாழ்க்கையை மறைத்து கேரளா சென்று, ஒரு நல்ல குடும்பத்து கிருஸ்தவ பையனை திருமணம் செய்து செட்டில் ஆகினால், நயன்தாரா வாழ்கை நல்லா இருக்கும். இல்லை என்றால், வாழ்க்கை கஷ்டம் தான்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in