விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்திற்கு ‛லியோ' டைட்டில்: அக்.,19ல் ரிலீஸ் | ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆப் கோதா' | ஒரே நேரத்தில் இரண்டு மெகா இயக்குனர்களின் படங்களில் நடிக்கப் போகும் சூர்யா! | திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா! | விஜய் 67 படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் சஞ்சய் தத்! | சாகுந்தலம் படத்திற்காக 30 கிலோ எடை கொண்ட புடவை அணிந்து நடித்த சமந்தா! | சினிமாவை விட்டு விலகினாரா பாண்டிராஜ்?: விவசாயத்தில் தீவிரம் | நானாக பட்டம் போட்டுக் கொள்ள மாட்டேன்: ஆர்ஜே.பாலாஜி | தமிழில் உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் படம் | காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா வழிபாடு |
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்குயின் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பம்பர் 12ம் தேதி ஆரம்பமானது. சுமார் 53 நாட்களுக்குள் முழு படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்கள். அதைவிடக் குறைந்த நாட்களில்தான் படப்பிடிப்புப் பணிகள் நடந்திருக்கும்.
படம் பற்றி கீர்த்தி சுரேஷ் குறிப்பிடுகையில், “நான் பணிபுரிந்த குழுவில் மிகவும் சிறந்த குழு. இந்தப் பயணத்தை இனிமையாகவும் ஞாபகமாகவும் ஆக்கியுள்ளீர்கள். நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதைக் காண காத்திருக்க முடியவில்லை,” என்று தெரிவித்திருக்கிறார்.
இப்படத்தின் முதல் பார்வையை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளான அக்டோபர் 17ம் தேதி வெளியிட்டார்கள். அதில் கீர்த்தி கர்ப்பமான பெண்ணாக போஸ்டரில் இருந்ததால் அவர் கதாபாத்திரம் மீதும் படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.