Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வள்ளுவருக்கு காவி உடை: கட்சிகள் மீது கஸ்தூரி காட்டம்

05 நவ, 2019 - 11:00 IST
எழுத்தின் அளவு:
Thiruvalluvar-issue:-Kasthuri-slams-politicians

இதுவரை ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் பொதுவானவராக கருதப்பட்டு வந்த உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரும் தற்போது மத சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார். அவருக்கு காவி வேஷ்டி அணிவித்தது, சிலை அவமரியாதை செய்யப்பட்டது என தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக இந்த பரபரப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.

எந்த ஒரு விஷயத்திற்கும் கருத்து தெரிவிக்கும் நடிகை கஸ்தூரி, திருவள்ளுவர் விவகாரத்திலும் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில், திருக்குறள் ஒரு மத நூல் இல்லை. வள்ளுவர் இந்துவா இருந்திருக்கலாம். அதில் என்ன தவறு? வள்ளுவருக்கு காவி கூடாது என்பதெல்லாம் உச்சக்கட்ட அரசியல் கூத்து. துறவின் நிறம் காவி. வெறும் கட்சி கொடி அல்ல.

இப்போ வள்ளுவர் எந்த மதம் என்று நிர்ணயித்துவிட்டால் தமிழ்நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைச்சிருமா? போயி_புள்ளகுட்டிங்கள_படிக்க_வையுங்க

வெள்ளை உடை என்றாலும் ஓகே, காவி வஸ்திரம் என்றாலும் ஓகே... திருவள்ளுவர் பச்சை தமிழன் என்று குறிக்க பச்சை உடை போட்டாலும் ஓகே. எந்த உடையா இருந்தா என்ன, எந்த மதமா இருந்தா என்ன. இதெல்லாம் ஒரு பிரச்சினைன்னு.... என பதிவிட்டுள்ளார்.

இதற்கு ‛‛நாங்க அய்யன் வள்ளுவன் என்கிறோம் அவர்கள் “அய்யர்” வள்ளுவர்னு மாத்த பாக்கறாங்க'' என ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த கஸ்தூரி, இங்கேயும் வெறுப்பு அரசியலா? எப்பிடி இப்பிடி யோசிக்க முடியுது? ஒருவேளை தமிழ்நாட்டில் அய்யர்கள் இல்லாம போயிட்டா அப்புறம் பகுத்தறிவு பார்ப்பனது வேஷிகள் பிழைப்புக்கு என்ன பண்ணுவீங்க ?

அது சரி. தங்க தமிழ்நாட்டில் திருவள்ளுவர் ஆடையும் பிரச்சினை, திரைப்பட ஆடையும் பிரச்சினை. கலாசார கண்மணிகளே, தமிழகத்தின் விடிவெள்ளிகளே நொட்டை சொல்வதை விட்டொழித்து குறள் சிலவேனும் படித்து அதை பின்பற்றி நடக்க முயலுங்கள்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
பிரகாஷ் ராஜ் நடிக்கக் கூடாது: தடை கேட்கும் இந்து அமைப்புகள்பிரகாஷ் ராஜ் நடிக்கக் கூடாது: தடை ... சிவகார்த்திகேயனின் ஹீரோ: புதிய அப்டேட் சிவகார்த்திகேயனின் ஹீரோ: புதிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

rmr - chennai,இந்தியா
09 நவ, 2019 - 18:57 Report Abuse
rmr இந்த உலக பொதுமுறையை மசூதியில் மற்றும் சர்ச்சில் தினம் ஒரு குரல் படிக்கச் சொல்லலாமே முடியுமா ? வாசிப்பார்களா அவர்கள் ?
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
07 நவ, 2019 - 03:17 Report Abuse
meenakshisundaram பொது மறைன்னா என்னங்கய்யா அர்த்தம் ?யாருய்யா சொல்றது?கர்நாடகாவிலும் 'கனகதாசர் 'ன்னு ஒரு அறிஞர் இருந்தார் ,இப்படியா அவங்க குதிக்கிறானுங்க? நீங்களே பொது மறை ,உலக மறைன்னு சொல்லலிக்கிறீங்க உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் ?
Rate this:
Believe in one and only God - chennai,இந்தியா
06 நவ, 2019 - 15:39 Report Abuse
Believe in one and only God கஸ்தூரி க்கு காவி கலர் சேலை கட்டுவது மட்டும் தான் பாக்கி. இவளை பெரிய ஆளாக நினைக்க வேண்டாம்.
Rate this:
Ramalingam Krishnaswamy - Puducherry,இந்தியா
06 நவ, 2019 - 13:11 Report Abuse
Ramalingam Krishnaswamy சிலைக்கு எதற்கு மேலும் ஓர் ஆடை ? அமைப்பிலேயே சிலைக்கு ஆடையும் செதுக்கப்பட்டுள்ளது கூடவா இந்த மேதாவிகளுக்குப் புரியவில்லை. . . . எல்லாம் இந்த உயர்ந்த புண்ணியதேசத்தின் தலைவிதி . . .
Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
06 நவ, 2019 - 10:22 Report Abuse
narayanan iyer வள்ளுவனை தமிழக கட்சிகள் ஏன் இப்படி கொச்சை படுத்துகிறார்கள்? எந்த வண்ண உடையாய் இருந்தால் என்ன? வள்ளுவன் இறைவன் , இறைவனுக்கு அவவனுக்கு பிடித்த உடையை அணிவித்து அழகுபார்க்கிறான் . பச்சை வண்ணம் அணிவித்தால் அவர் முஸ்லீம் ஆகிவிடுவாரா ? ஒரு தேவை இல்லாத உப்புபோறாத விஷயத்தை கையில் எடுத்து ஒரு சப்தம் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் எக்கட்சிக்காரர்களுக்கு . ஏன் எனில் ஒருதேர்தலுக்கும் அடுத்த தேர்தலுக்கும் இருக்கும் இடைப்பட்ட காலத்திலும் மக்கள் மனதில் கட்சியின் பெயர் இருக்க வேண்டும் என்ற ஆவலில் காட்சிகள் இருக்கிறது . கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள் , வள்ளுவனின் ஒரு குறளின்படிகூட நடக்கமுடியவில்லை ஆகவே வள்ளுவனை பற்றி பேசும் தகுதி௯ நமக்கில்லை என்று உணர்ந்து ஒதுங்கிவிடுங்கள் .
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in