Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரகாஷ் ராஜ் நடிக்கக் கூடாது: தடை கேட்கும் இந்து அமைப்புகள்

05 நவ, 2019 - 10:36 IST
எழுத்தின் அளவு:
Hindu-association-seeks-to-Ban-Prakash-Raj-in-Cinema

நடிகர் பிரகாஷ் ராஜ், கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், அரசியலில் குதித்தார். அது முதல், அவர், இந்துத்துவாவையும், பா.ஜ.,வையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அவர், டிபாசிட் கூட பெறாமல் மோசமாக தோல்வி அடைந்தார். இருந்தபோதும், அவர், தன்னுடைய இந்து, பா.ஜ., எதிர்ப்பை கொஞ்சமும் குறைத்துக் கொள்ளவில்லை.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், ராம்லீலா நிகழ்ச்சியை, குழந்தைகள் ஆபாசத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். அதோடு உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தையும் மோசமாக விமர்சித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி, பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளன.

இதையடுத்து, பிரகாஷ் ராஜ், திரைப்படங்களில் நடிக்க வாழ்நாள் தடைவிதிக்க வற்புறுத்தி, இந்து மகாசபா உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் கன்னட திரைப்பட வர்த்தக சபையில் மனு அளித்துள்ளன.

அந்த மனுவில், அந்த அமைப்பினர் கூறியிருப்பதாவது: இந்து மதத்தையும்; இந்து மத தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து பேசி வருகிறார். இது, இந்து மக்களின் மனதை புண்படுத்துகிறது. எனவே, அவர் படங்களில் நடிக்க தடைவிதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
சிருஷ்டி டாங்கே கவர்ச்சி போட்டோ ஷூட்சிருஷ்டி டாங்கே கவர்ச்சி போட்டோ ஷூட் வள்ளுவருக்கு காவி உடை: கட்சிகள் மீது கஸ்தூரி காட்டம் வள்ளுவருக்கு காவி உடை: கட்சிகள் மீது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Selvaraj Chinniah - sivagangai,இந்தியா
21 மே, 2020 - 16:31 Report Abuse
Selvaraj Chinniah இந்தியாவுக்குள் வந்த தீவிரவாத கூடடமும், மத மற்ற கூடடமும் அழித்து, ஒழித்து, விரட்டி அடிக்க படவேண்டும்.
Rate this:
LAX - Trichy,இந்தியா
11 நவ, 2019 - 01:42 Report Abuse
LAX 'பாரா தேர்தலுக்கு முன் அரசியலில் குதித்தார்.. ' - குதிச்ச வேகத்துல (டெபாஸிட் இழந்து) மூக்கு உடைந்தது.. இல்லயில்ல சிதைந்தது என்றே சொல்லணும்.. மூக்கு சிதைந்தும் (இந்துக்களை மட்டும்) சீண்டுறான் 'மற்ற மதங்களைப் பற்றிப் பேச அஞ்சி நடுங்கும் கும்பலில் ஒருவன்' ..
Rate this:
maruthu pandi - Oru peru vendaam nanbaa,இந்தியா
07 நவ, 2019 - 07:50 Report Abuse
maruthu pandi இவனுக்கு எப்படி வந்துச்சுன்னு தெரியலையேப்பா.
Rate this:
easwaran.s - tiruvallur,இந்தியா
06 நவ, 2019 - 10:22 Report Abuse
easwaran.s அவரை பிடிக்கலைன்னா படத்தை பார்க்கவேண்டாம், தானாக அவருக்கு படங்கள் குறையும், அவராகவேய நடிப்பில் இருந்து விலகிவிடுவார்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
05 நவ, 2019 - 16:27 Report Abuse
Girija தமிழர்கள் பிற மாநிலத்தவர்கள் வேலை வாய்ப்பை தட்டி பறிப்பதாக பேசியதற்கு தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பே தரக்கூடாது .
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in