Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛இருட்டு'க்கு பயப்படும் போலீசின் கதை

04 நவ, 2019 - 11:07 IST
எழுத்தின் அளவு:
V1-new-movie-based-on-police-story

‛குற்றம் கடிதல், ஆண்டவன் கட்டளை, காலா' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பாவல் நவகீதன். அவர் இயக்கியிருக்கும் படம் வி1. இதில் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அரவிந்த் தர்மராஜ், ராமு, சரவணன் பொன்ராஜ் தயாரித்துள்ளனர் கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோனி ரப்ஹெல் இசை அமைத்துள்ளார். படத்தின் பணிகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. படம் பற்றி இயக்குனர் பாவெல் நவநீதன் கூறியதாவது:

காவல் துறையில் கை ரேகை பிரிவு என்ற ஒரு பிரிவு உள்ளது. பல குற்றங்களை கண்டுபிடிப்பதற்கு இந்தப் பிரிவு உதவியாக இருக்கிறது. வெளிநாடுகளில் நவீன தொழில்நுட்பத்துடன் இந்தப் பிரிவு செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு தொழில் நுட்ப வசதிகள் மிகவும் குறைவு. இருக்கிற வசதியை கொண்டு இத்துறை நிபுணர், அதாவது போலீஸ் அதிகாரி ஒருவர் ஒரு பெரிய குற்றத்தை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

இதில் முக்கியமாக அந்த போலீஸ் அதிகாரிக்கு இருட்டைக் கண்டால் பயப்படுகிற ஒரு குறைபாடு உண்டு. இதையும் வைத்துக்கொண்டு அவர் எப்படி அந்த குற்றத்தை கண்டுபிடிக்கிறார் என்பதை சுவாரசியமாகவும், திகில் கலந்தும் செல்கிறோம். க்ரைம் படங்கள் சினிமாவுக்கு புதிது இல்லை என்றாலும் இதன் திரைக்கதையும், குற்றத்தை கண்டுபிடிக்கும் போக்கும், புதுமையாக இருக்கும்.

கொலையாளி யார் என்பதை கடைசி நிமிடம் வரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் இந்த படத்தின் பலம். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். அவர்களும் குற்றவாளி யார் என்பதை எங்களால் கடைசிவரை கண்டு பிடிக்க முடியவில்லை என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. படம் டிசம்பர் மாதம் வெளிவருகிறது. என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அயர்ன் லேடி தாமதம்  ஏன்? : இயக்குனர் விளக்கம்அயர்ன் லேடி தாமதம் ஏன்? : இயக்குனர் ... படங்களுக்கான அரசு மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்: இயக்குனர் தகவல் படங்களுக்கான அரசு மானியத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in