Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அயர்ன் லேடி தாமதம் ஏன்? : இயக்குனர் விளக்கம்

04 நவ, 2019 - 11:01 IST
எழுத்தின் அளவு:
why-delay-of-Jayalalitha-Biopic-The-Iron-Lady:-Director-replied

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை தி அயர்ன் லேடி என்ற பெயரில் சினிமாவாக தயாராகிறது. பிரியதர்ஷினி இயக்குகிறார். ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படம் அறிவிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் படம் இன்னும் தொடங்கப்படவில்லை. படம் தாமதமாவது ஏன் என்பது குறித்து பிரியதர்ஷினி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

தி அயர்ன் லேடி திரைப்படம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு வாழ்க்கைக் கதையையும் உள்ளடக்கியது. உண்மை கதாபாத்திரம் கோரும் வெவ்வேறு அம்சங்களை கவனமாக பட்டியலிட்ட பிறகு, நித்யா மேனனை ஜெயலலிதாவாக நடிக்க தேர்வு செய்தேன். ஜெயலலிதா போன்று முக அமைப்பு முதல் ஆளுமை திறன் வரை நித்யா மேனன் இயற்கையாகவே அவரின் பண்புகளையும் உள்ளடக்கியிருக்கிறார். ஆறு மொழிகளை சரளமாக பேசக்கூடியவர், சிறு வயது முதலே பரதநாட்டியம் மற்றும் ஆடல் கலை அறிந்தவர், இசையிலும் நேர்த்தியான திறன் கொண்டவர்.

ஒரு வாழ்க்கை வரலாற்றின் மிகவும் சவாலான அம்சம் அதை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகும். வாழ்கை வரலாற்று படங்கள் பொதுவாக அதிக சிக்கல்கள், சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் இருந்தாலும் அதன் நிஜ தன்மையில் இருந்து மாறாமல் மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்று கொண்டு இருக்கிறேன். இந்த களத்தில் ஒரு இயக்குனருக்கு முன் வைக்கப்படும் சவால்கள் அதிகம். மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய, ரசிக்க கூடிய வகையில் ஒரு தரமான படைப்பை கொடுக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.

ரிச்சர்ட் ஆடன்பரோ, காந்தி வாழ்க்கை வரலாற்றை வடிவமைக்க 18 ஆண்டுகள் செலவிட்டார். ஒரு சிறந்த வாழ்க்கை வரலாற்று படம் மிக சிறந்த படைப்பாக அமைய அதற்கான சரியான கால அவகாசம் தேவைப்படுகிறது இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

இந்த களத்தில் 50 சதவீத வெற்றி சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் இருக்கிறது. இதில் எந்த நிலையிலும் சமரசம் செய்ய இயலாது. அப்படி செய்தால் நீங்கள் கண்டிப்பாக ஏற்று கொள்ள மாட்டீர்கள் என்பதை அறிந்து இருக்கிறோம். மேலும் உண்மை நிலையில் இருந்து மாறாமல், படைப்பாற்றல் சுதந்திரத்தோடு உங்கள் முன் வைக்க எண்ணுகிறோம்.

படத்தில் உள்ள மூன்று முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருக்கும் நடிகர்களின் தேதிகளுக்காகவும் அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஏற்ற நேரத்திற்காக காத்து கொண்டு இருக்கிறேன். இதனை அறியும் போது சுவாரஸ்யமாகவும், உற்சாகமாகவும் இருக்கும். சாத்தியமற்ற அனைத்தையும் சாத்தியமாக்குவோம்.

இவ்வாறு பிரியதர்ஷினி கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' டிசம்பர் ரிலீஸ்செல்வராகவனின் 'நெஞ்சம் ... ‛இருட்டு'க்கு பயப்படும் போலீசின் கதை ‛இருட்டு'க்கு பயப்படும் போலீசின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in