யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
கடந்த 2009ல் சல்மான்கானை வைத்து வாண்டட் என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் இயக்குனராக நுழைந்தார் அதைத்தொடர்ந்து ரவுடி ரத்தோர் உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது சல்மான்கானை வைத்து ஏற்கனவே அவர் நடித்து வெற்றி பெற்ற தபாங் படத்தின் மூன்றாம் பாகமாக 'தபாங்-3'யை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 20ல் வெளியாக இருக்கிறது.
இந்தநிலையில் இந்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே மீண்டும் சல்மான்கான், பிரபுதேவா கூட்டணி அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். இந்த படத்திற்கு ‛ராதே' என பெயரிட்டுள்ளனர். சல்மான்கான், சோஹைல் கான் மற்றும் அதுல் அக்னிஹோத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் கதாநாயகியாக திஷா பதானி நடிக்க, முக்கிய வேடத்தில் ஜாக்கி ஷெராப் மற்றும் ரன்தீப் ஹூடா ஆகியோர் நடிக்கின்றனர். வரும் 2020 ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டமாக இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பதையும் இன்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் விட்டனர்.