ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா |
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான, ரஜினி, விஜய் சூர்யா, கார்த்தி ஆகியோரின் படங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அங்குள்ள ஹீரோக்களுக்கு நிகரான வசூலை அள்ளுகிறது. இதுதவிர தமிழ் நடிகர்களான சத்யராஜ், விஜய் சேதுபதி, ஷாம் உள்ளிட்ட பலர் தெலுங்கில் பிசியாக நடிக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் உள்ளிட்ட பிறமொழி நடிகர்கள் தெலுங்கு படத்தில் நடிக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
தெலுங்கு நடிகர் சங்கத்தின் ஒரு பிரிவினர், நேற்று தெலுங்கு இயக்குனர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: தெலுங்கு பட உலகில் தமிழ், கன்னடம் உள்ளிட்ட பிறமொழி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கின்றனர். இதனால் தெலுங்கு குணசித்திர நடிகர்கள் வருமானம் இன்றி வீட்டு வாடகை கூட கொடுக்க பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.
ரஜினிகாந்த், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட தமிழ் நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும் அதே நாளிலேயே தெலுங்கிலும் ரிலீசாகிறது. தமிழ்நாட்டில் தோல்வி அடையும் சில படங்கள் கூட ஆந்திராவில் வசூல் குவிக்கின்றன. ஆனாலும் தெலுங்கு நடிகர்களை தமிழ் படங்களில் அவர்கள் நடிக்க வைப்பது இல்லை.
சத்யராஜ், விஜய் சேதுபதி, பிரபு, ஜெயப்பிரகாஷ், ஷாம் உள்ளிட்ட தமிழ் நடிகர்களையும் சுதீப், ரவிகிஷன் உள்ளிட்ட கன்னட நடிகர்களையும் தெலுங்கு படங்களில் நடிக்க வைக்கின்றனர். பிரபாஸ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த சாஹோ படத்தில் அவரைத் தவிர யாருமே தெலுங்கு பேசுபவர்கள் இல்லை. சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் பிறமொழி நடிகர், நடிகைகளே அதிகம் இருந்தனர்.
தந்தை, தாய், அண்ணி, தங்கை கதாபாத்திரங்களுக்கும் பிறமொழிகாரர்களையே அழைக்கின்றனர். அவர்களுக்கு கேரவன், நட்சத்திர ஓட்டலில் ரூம், அதிக சம்பளம் கொடுக்கின்றனர். இதனால்தான் அவர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தெலுங்கு படங்களில் தெலுங்கு நடிகர்களுக்கே வாய்ப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.