ஜூனியர் என்டிஆர் படத்தில் பிரியங்கா சோப்ரா? | பதிரனாவுடன் காதலா? விளக்கமளித்த பாக்கியலெட்சுமி நடிகை | யாஷிகாவுடன் காதலா? - வெறும் புரொமோஷன் தாங்க என்கிறார் ரிச்சர்ட் ரிஷி | பொய் புகார் : பிரான்ஸ் பெண் மீது அறம் இயக்குனர் புகார் | போதையில் நடிகர் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு | காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் | நேஹா சக்சேனாவும் பரபரப்பு வளையத்தில் சிக்குவாரா? | இறுதிக்கட்டத்தை எட்டிய அர்ஜுன் - நிக்கி கல்ராணியின் மலையாள படம் |
குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கியவர் ராஜு முருகன். இவரின் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ஜிப்ஸி. நடாஷா சிங் என்ற புதுமுகம் இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இது ஒரு கம்யூனிஸ்ட் நாடோடி பாட்டுக்காரனின் கதை. அவன் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்கிறான். அப்போது நடக்கும் அரசியல் பிரச்சனைகளால் அவனுக்கு ஏற்படும் பாதிப்புகளும், அதை அவன் எப்படி சரி செய்கிறான் என்பதே படத்தின் கதை.
இந்த படத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், இந்து மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், குறிப்பாக உத்தர பிரதேச முதல் அமைச்சார் யோகிநாத்தை கிண்டல் செய்வதாகவும் கூறி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர மறுத்து விட்டனர். அதன் பிறகு ரிவைசிங் கமிட்டிக்கும் சென்றார்கள். அங்கும் சான்றிதழ் தர மறுத்துள்ளார்கள். எனவே படத்தை தீர்ப்பாயத்திற்கு சென்றுள்ளார்கள்.
நடிகை கவுதமி தலைமையிலான தணிக்கை தீர்ப்பாயம் படத்தை பார்த்துவிட்டு அதில் சில காட்சிகளை நீக்கினால் ஏ சான்றிதழுடன் தணிக்கை சான்றிதழ் தரப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு தயாரிப்பு தரப்பு ஒப்புக் கொள்ளவே படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தை வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.