ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா | உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை | ரஜினி 170 : புது ஹேர்ஸ்டைலில் ரஜினிகாந்த்… | ஸ்ரீதேவி மறைவுக்கு என்ன காரணம்? - போனி கபூர் விளக்கம் | மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் |
டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1986ம் ஆண்டு வெளிவந்த 'மைதிலி என்னை காதலி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலா. தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட 80களின் முன்னணி ஹீரோக்களின் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்த அமலா, தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவைத் திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவை விட்டு விலகினார்.
பின்னர் 2010ல் டிவியில் நடுவராக களம் புகுந்தார். 'உயிர்மை' என்ற டிவி தொடரிலும் நடித்தார். ஆனால், தமிழ் சினிமாவில் 1991ல் வெளிவந்த 'கற்பூர முல்லை' படத்திற்குப் பிறகு அவர் நடிக்க வரவில்லை.
தற்போது தமிழ், தெலுங்கில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சர்வானந்த், ரிது வர்மா நடிக்க, ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சர்வானந்த் அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகிறார் அமலா.