விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
பிகில் படத்திற்காக பொது சொத்துக்களை சேதப்படுத்தி, இப்போது கம்பி எண்ணி வருகின்றனர் விஜய்யின் ரசிகர்கள். தங்கள் பிள்ளைகள் சிறை செல்வதை கண்ட பெற்றோர்கள் கண்ணீரும், கம்பலையுமாக இருக்கின்றனர்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளி கொண்டாட்டமாக கடந்த அக்.,25ம் தேதி வெளியான படம் ‛பிகில். இப்படத்தின் சிறப்பு காட்சிக்காக ஒரு போராட்டம் நடந்து, இறுதியில் அரசு அனுமதித்தது. கிருஷ்ணகிரியில் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிட தாமதமாவதாக கூறி விஜய் ரசிகர்கள் ஏராளமான பேர் அந்த பகுதியில் இருந்த பொது சொத்துக்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசார் ஏற்கனவே 32 பேரை கைது செய்தனர். இப்போது மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் சிறுவர்கள்.
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு. ஒரு காட்சி இல்லாவிட்டால் அடுத்தக்காட்சி. இதற்கு போய் பொது சொத்துக்களை சேதப்படுத்தி, இப்படி வாழ்க்கையையும் வீணாக்கி, பெற்றோரையும் கலங்க வைக்கும் இது போன்ற ரசிகர்களை என்னவென்று சொல்வது.