Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீண்ட இடைவெளி... இணைந்த இளையராஜா, பாரதிராஜா

01 நவ, 2019 - 14:53 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja---Bharathiraja-met-after-long-time

பாரதிராஜா, இளையராஜா இருவரும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நண்பர்களாக இருந்தவர்கள். சினிமாவில் நுழைந்த பின் இவர்கள் இணைந்த படங்கள் வெற்றிப் படங்களாகவும், பாடல்கள் இன்றைக்கும் ரசிக்கும்படியாகவும் இருக்கின்றன.

இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா மேடையில் இளையராஜாவைப் பற்றி விமர்சித்துப் பேசிய பின் இருவரும் பிரிந்தார்கள். பதிலுக்கு இளையராஜாவும் பாரதிராஜா பேச்சு பற்றி வருத்தப்பட்டுப் பேசினார். அதன் பின் இருவரும் சந்தித்துக் கொள்ளவேயில்லை.




சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோ, இளையராஜா சம்பந்தப்பட்ட இடப் பிரச்சினையில் இளையராஜாவுக்கு ஆதரவாக பாரதிராஜா களத்தில் இறங்கி இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று(நவ., 1) தேனி, வைகை அணையில்திடீரென இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். ஒரே காரில் இருவரும் அமர்ந்துள்ள புகைப்படத்தை பாரதிராஜா அவருடைய டுவிட்டரில் வெளியிட்டு, “நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு இதயங்கள் இணைந்தன. இயலும், இசையும், இணைந்தது.... இதயம் என் இதயத்தை தொட்டது, என் தேனியில்” என்று குறிப்பிட்டுள்ளார்.




கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 9ம் தேதி ஒரு பிரம்மாண்ட இசை விழா நடைபெற உள்ளது. அதில் இருவரும் ஒன்றாக மேடையில் கலந்து கொள்ள உள்ளார்கள் எனத் தெரிகிறது. அதன் முன்னோட்டமாகவே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

பாடல் காப்பிரைட் விவகாரத்தில் இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் மோதிக் கொண்டு பிரிந்திருந்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு இசைக் கலைஞர்கள் சங்க விழாவுக்காக அவர்கள் இணைந்து இசை ரசிகர்களை மகிழ்வித்தார்கள்.

இப்போது பாரதிராஜா, இளையராஜா மீண்டும் இணைந்திருப்பது குறித்து அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (24) கருத்தைப் பதிவு செய்ய
அம்மான்னா சும்மா இல்லேடாஅம்மான்னா சும்மா இல்லேடா ‛பரவை' முனியம்மா நலம் - வதந்தி பரப்பாதீர்கள் ‛பரவை' முனியம்மா நலம் - வதந்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (24)

Young Prince - Bangalore,இந்தியா
04 நவ, 2019 - 21:26 Report Abuse
Young Prince என்ன திருநீறு வச்சிருக்காரு நம்ம பாரதி ராஜா... மாறிட்டாரா?
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
02 நவ, 2019 - 09:17 Report Abuse
A.George Alphonse இவர்களின் இணைப்புக்கு பின் நமது மாநிலத்தில் எல்லா சாலைகளிலும் தேனும்,பாலும் கரைபுரண்டு ஓடி அந்த காலத்து சேரன்,சோழன்,பாண்டியர்களின் பொற்காலத்தையா நினைவுபடுத்தப்போகிறது.
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
02 நவ, 2019 - 07:48 Report Abuse
ஆரூர் ரங் இனிமே இணைஞ்சா என்ன இணையாட்டி என்ன? நிரந்தரமா இருவருக்கும் மார்க்கெட் போயாச்சு போயே போச் போயிந்தி
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02 நவ, 2019 - 06:59 Report Abuse
skv srinivasankrishnaveni அச்சச்சோ மீண்டும் சேர்ந்தாச்சா நன்னா ஆச்சு சினிஉலகம் உருப்படும் போங்க மக்கள் அவ்ளோகவலையா இருந்தாளாம் என்னடா இது இப்படிபண்ணிட்டாங்களே என்று ,வேறு வேலையே இல்லியா உங்களுக்கு
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
02 நவ, 2019 - 05:49 Report Abuse
meenakshisundaram பாரதிராஜா நடுவிலே கொஞ்சம் (?) பாதை தவறி காணாமல் போயிருந்தார்
Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in