மேடையில் கண்கலங்கிய ஐஸ்வர்ய லட்சுமி | ஆண்ட்ரியாவுக்கு முதன்முறை | சீரியலில் மாஸான என்ட்ரி : வனிதாவின் புது ட்ராக் | அழகு நாயகிகளின் ரீ-யூனியன் | சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன்'', ‛‛பார்வதி'': லீனாவின் அடுத்த ‛‛குசும்பு'' | பொன்னியின் செல்வன் - குந்தவையாக த்ரிஷா | நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன் | காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட அடார் லவ் இயக்குனர் | ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை | போக்சோ சட்டத்தில் ‛கும்கி' நடிகர் கைது |
தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி படங்களைத் தொடர்ந்து தற்போது, "பட்லர் பாலு" எனும் படத்தில் காமெடி ஹீரோவாக நடித்துள்ளார் யோகி பாபு. இதில் அவரோடு இமான் அண்ணாச்சி, மயில்சாமி, ரோபோசங்கர், தாடி பாலாஜியும் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க நகைச்சுவையை அடித்தளமாக கொண்ட இப்படத்தில் யோகி பாபுவிற்கு கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையல்காரர் வேடம். சமையல் வேலைக்காக சென்ற திருமண மண்டபத்தில் மணப்பெண்ணை யோகிபாபுவின் நண்பர்கள் கடத்தி விடுகிறார்கள். அதனால் போலீஸ் அவரை கைது செய்து விடுகிறது. போலீசிடம் இருந்து எப்படி வெளியே வந்தார். என்பதுதான் படத்தின் கதை.
எம்.எல்.சுதிர் என்பவர் இயக்கி இருக்கிறார். பால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார். தோழா கிரியேஷன் சார்பில் கிருத்திகா தயாரித்துள்ளார்.
"இந்த படத்தில் நான் 5 நாட்கள் மட்டும் தான் நடித்தேன். நான் படத்தின் ஹீரோ என்று விளம்பரம் செய்து வருகிறார்கள்" என்று யோகி பாபு சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.