Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குபேரனை தமிழில் வெளியிடும் ராஜ்கிரண்

01 நவ, 2019 - 10:48 IST
எழுத்தின் அளவு:
Rajkiran-releasing-Kuberan-movie

தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் ராஜ்கிரண். பிறகு ராஜாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் நடிகர் ஆனார். நடிகரான பிறகு விநியோக தொழிலை விட்டு விட்டார். இப்போது மீண்டும் அதை கையில் எடுத்திருக்கிறார்.

மம்முட்டியும், ராஜ்கிரணும் முதல் முறையாக ஸ்கைலாக் என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். தமிழில் 'குபேரன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை அஜய் வாசுதேவ் இயக்கி உள்ளார். ஜோபி ஜார்ஜ் தயாரித்துள்ளார்.

இதில், மீனா ராஜ்கிரண் ஜோடியாக நடித்திருக்கிறார். இருவரும் ஏற்கனவே 'என் ராசாவின் மனசிலே' படத்தில் ஜோடியாக நடித்து இருந்தார்கள். 28 ஆண்டுகளுக்கு பின், இருவரும் மீண்டும் இந்த படத்தில் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள். படத்தில் மம்முட்டிக்கு ஜோடி இல்லை.

படத்தை பெரிய அளவில் வெளியிட ராஜ்கிரண் முயற்சி மேற்கொண்டுள்ளார். படத்தில் ராஜ்கிரண் நடித்தற்கு சம்பளம் பெறாமல் அதற்கு பதிலாக படத்தின் தமிழ் உரிமையை வாங்கி இருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
குட்டி பத்மினி தயாரித்துள்ள போலீஸ் டைரி 2.0குட்டி பத்மினி தயாரித்துள்ள போலீஸ் ... பட்லர் பாலுவில் யோகிபாபு சமையல் கலைஞர் பட்லர் பாலுவில் யோகிபாபு சமையல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
01 நவ, 2019 - 18:40 Report Abuse
Vasudevan Srinivasan "குபேரன்" வெற்றி பெற்று ராஜ்கிரண் அவர்களை மீண்டும் குபேரனாக உயர்த்தட்டும்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in