Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிதி அமைச்சருடன் திரையுலக சங்க நிர்வாகிகள் சந்திப்பு

01 நவ, 2019 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Tamilnadu-cinema-industry-peoples-met-Finance-Minister-Nirmala-Seetharaman

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், இசை கலைஞர்கள் சங்கத் தலைவர் தினா ஆகியோர் தங்கள் சங்க நிர்வாகிகளுடன் சந்தித்தனர். சந்திப்பு குறித்து ஆர்.கே.செல்வமணி கூறியதாவது:

பெப்சி அமைப்பின் பொன்விழாவை பிரமாண்டமாக கொண்டாட இருக்கிறோம். அதற்கு அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை அழைத்தோம். அதோடு சில கோரிக்கைகளையும் வைத்தோம். திரைப்படங்களுக்கு விலங்கு நலவாரியத்திடமிருந்து தடையில்லா சான்று வாங்க டெல்லி வரைக்கும் செல்ல வேண்டியது இருக்கிறது.

அதனால் விலங்கு நல வாரியத்தின் கிளை ஒன்றை சென்னையில் அமைக்க வேண்டுகோள் விடுத்தோம். மறுநிமிடமே விலங்குகள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடன் பேசினார். வருகிற நவம்பர் 4ந் தேதி இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச எங்களை அழைத்திருக்கிறார்.

இதுதவிர சினிமாவுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும், ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை இந்தியா முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். பெப்சி தொழிலாளர்களுக்கு 60 வயதுக்கு பிறகு பென்சன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவரிடம் சொன்னோம். இதுகுறித்து ஆவன செய்வதாக அவர் தெரிவித்தார். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பரபரப்பை ஏற்படுத்திய 'பிகில்' காட்சி ரத்துபரபரப்பை ஏற்படுத்திய 'பிகில்' ... விஜய்சேதுபதிக்கு எதிராக வியாபாரிகள் போர்க்கொடி விஜய்சேதுபதிக்கு எதிராக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in