Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேரளாவில் நின்று விளையாடும் கைதி

31 அக், 2019 - 17:21 IST
எழுத்தின் அளவு:
Kaithi-steady-in-Kerala

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் விஜய் படங்கள் வெளியாகும்போது வேறு எந்த மலையாளப் படங்களும் வெளியாவது இல்லை. ஆனால் இந்தமுறை தீபாவளி ரிலீஸாக விஜயின் பிகில் படத்துடன், கார்த்தியின் கைதி படமும் சேர்ந்தே வெளியானது. ஆனால் கைதி படத்தின் வலுவான கதையும், திரைக்கதையும் அந்தப்படத்தின் வெற்றியை உறுதி செய்து, நாளுக்கு நாள் படத்திற்கான காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் கைதி திரைப் படத்திற்கான வரவேற்பு சிறிதும் குறையவில்லை என்றே பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் சொல்கிறது.

கைதி படத்தின் கேரள வெளியீட்டு உரிமை சுமார் 60 லட்சத்திற்கு விற்கப்பட்டது. வெளியான முதல் நாளன்று 40 லட்சம் வசூலித்த கைதி, கடந்த நான்கு நாட்களில் கேரளாவில் மட்டும் சுமார் 2.29 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.. வரும் நவம்பர்-8ல் மம்முட்டியின் பிரமாண்ட வரலாற்று படமான மாமாங்கம் வெளியாகும் வரை, கேரளாவில் பிகில் படத்தைப்போலவே கைதியின் ஓட்டமும் தடைபட வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் 64ல் ‛96' புகழ் கௌரி கிஷன்விஜய் 64ல் ‛96' புகழ் கௌரி கிஷன் துப்பறிவாளன் 2விற்காக மீண்டும் இணையும் ரகுமான் - கவுதமி துப்பறிவாளன் 2விற்காக மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
01 நவ, 2019 - 18:42 Report Abuse
TAMILAN நிஜ சூப்பர் ஸ்டார் சூர்யாவும், தம்பியும், நிஜ ஹீரோக்கள் . மனவர்களுக்காகவும், இயற்கை விவசாயத்திற்ற்க்காகவும் பாடுபடுகிறார்கள். தந்து சொந்த ஊரில் வீடு வீடாக சென்று இயற்கை விவசாயத்தை ஊக்குவிற்கின்றனர். உதவியும் செய்கின்றனர். விஜய் அஜித்.டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் நல்ல உணவை சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் சாப்பிடுவதோடு நிறுத்தாமல் சூர்யா, கார்த்திக் போல் காளத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும், சீமான் கூட மேடையிலேயே பேசுகின்றார். ஆனால் இவர்கள் இருவரும் பிரமாதம். வாழ்க நிஜ சூப்பர் ஸ்டார்கள். ரஜினி தன வால் நாளில் இது போன்ற நல்ல காரியம் எதுவுமே செய்ததில்லை.
Rate this:
rajinidasan - Bangalore,இந்தியா
04 நவ, 2019 - 12:11Report Abuse
rajinidasanஅது எப்படி கொஞ்சம் கூட யோசிக்காம சொல்றீங்க ரஜினி எவ்ளோ செய்தாலும் நன்றி மறந்துவிட்டு இப்படி பேசுறீங்க... இப்ப தான் புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு ரூ 18 லட்சம் செலவில் தலா 10 வீடுகள் கட்டிக்கொடுத்தார். இதுவே சூர்யா கார்த்தினா ஆஹா ஓஹோனு சொல்வீங்க. ரஜினின்னா வழக்கம் போல் மறந்துடுவீங்க...
Rate this:
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) பிகிலு ....ம்மே ம்மே ம்மே
Rate this:
ராஜா - Chennai,இந்தியா
31 அக், 2019 - 18:15 Report Abuse
ராஜா நல்ல படங்களை, படைப்பாளர்களை, ரசிகர்களை தமிழ் சினிமா இழந்து வருகிறது காரணம் பிரமாண்டம், விளம்பர மோகம் போன்ற குப்பைகளை தலையில் வைத்து வரும் படங்களை வெறி பிடித்து வெற்றிபெற செய்வதால் தான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in