Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

குண்டு பெண் கிண்டல்: சோனாக்ஷி சின்ஹா பதிலடி

31 அக், 2019 - 12:26 IST
எழுத்தின் அளவு:
sonakshi-Sinha-reply-who-trolled-her-fat-body

ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் அவரது ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. தற்போது சல்மான்கானுடன் தபங் 3 படத்தில் நடித்து வருகிறார். பேஷன் சூப்பர் ஸ்டார் என்ற டிஜிட்டல் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

அதன் சமீபத்திய வீடியோ ஒன்றில் தனக்கு சமூக வலைத்தளங்களில் நடக்கும் டிரோல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

“சில வருடங்களாகவே என்னுடைய உடல் பருமன் குறித்து பலமாக டிரோல் செய்யப்பட்டுள்ளேன். அதற்கு எதிராக கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நினைத்ததேயில்லை. அவர்களைவிட நான் பெரியவள் என்பதே அதற்குக் காரணம். 30 கிலோ குறைந்த பின்னும் கிண்டலடித்தார்கள். எனது வளைவுகள், எனது எடை, எனது இமேஜ், என நான் எதையும் மறைப்பதில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த வீடியோவின் ஆரம்பத்தில் அவர் எப்படியெல்லாம் கிண்டலடிக்கப்பட்டார் என்பதையும் தெரிவித்துள்ளார்.

“கேட்வாக்கில் மாடு, ஆன்ட்டி ஜி, குண்டு, யானை,” என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் தன்னை கிண்டலடித்துள்ளார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உடல் பருமனைப் பற்றிய கிண்டல்களுக்கும், அது சார்ந்த நகைச்சுவைக்கும் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த பிகில் படத்தில் இடம் பெற்ற குண்டம்மா வசனத்திற்கும் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.





Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் - அட்லியை வாழ்த்திய கரண் ஜோஹர்விஜய் - அட்லியை வாழ்த்திய கரண் ஜோஹர் ஐஸ்வர்யா ராயின் மேனேஜரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய ஷாருக்கான் ஐஸ்வர்யா ராயின் மேனேஜரை தீ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

krishnamurthy - chennai,இந்தியா
31 அக், 2019 - 19:43 Report Abuse
krishnamurthy ஒரு தமிழ் சீரியலில் ஒரு பெண்ணை தின்னிமூட்டை என்றே கூப்பிடுகிறார்களே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in