‛பொன்னியின் செல்வன்' பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் | தீவிர உடற்பயிற்சியில் ஐஸ்வர்யா ரஜினி | ரஜினியின் ‛ஜெயிலர்' படப்பிடிப்பு துவங்கியதாக தகவல் | செப்டம்பர் 9ல் வெளியாகும் அமலாவின் கணம் | நான் பாடிய பாடலை அதிதி ஷங்கர் பாடியதால் எந்த வருத்தமும் இல்லை : பாடகி ராஜலட்சுமி | ஜின்னா - தெலுங்கு படத்தில் சன்னி லியோன் : போஸ்டர் வெளியானது | மும்பையில் ஜோதிகா, சூர்யா : வைரலாகும் புகைப்படங்கள் | செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா : தமிழ்தாய் வாழ்த்துப் பாடி அசத்திய சிவகார்த்திகேயன் மகள் | சென்னைக்கு வரும் 'லைகர்' படக்குழு | ராஷ்மிகாவின் மூன்று முக்கிய ஆசைகள் |
நடிகையரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் இருவருமான ஷெரின் மற்றும் சாக்ஷி இருவரும், இந்த தீபாவளியை நடிகரும் இயக்குநருமான சேரன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடி உள்ளனர்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல் தொகுத்து வழங்க, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி, 105 நாட்களாக தொடர்ச்சியாக நடந்து, சமீபத்தில்தான் முடிந்தது.
இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முகென் ராவும், ரன்னராக சாண்டியும் தேர்வு செய்யப்பட்டனர். மூன்றாம் இடத்துக்கு லாஸ்லியா வந்தார். அவர்களுக்கு முன்னதாக போட்டியாளர்களாக இருந்த நடிகைகள் ஷெரின், இயக்குநர் சேரன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும், போட்டியாளர்களாக பங்கெடுத்த ஒவ்வொருவரும் வெளியிடங்களில் தொடர்ச்சியாக சந்தித்து நேரம் செலவிடுகின்றனர். அந்த வகையில், சேரன் வீட்டுக்கு ஷெரின், சாக்சி ஆகியோர் ஏற்கனவே சென்று வந்தனர். அவர்களுக்கு விருந்து உபசரிப்புகளும் நடந்துள்ளன. இந்நிலையில், இந்தாண்டு தீபாவளியை ஷெரின், சாக்ஷி ஆகியோர் சேரன் குடும்பத்தினருடன் கொண்டாடி இருக்கின்றனர்.