புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' | மைசூரில் ஜாலியாக ஊர் சுற்றும் ராம் பொத்தனேனி, ஸ்ரீலீலா | மம்முட்டி கிடைக்காததால் பசுபதியை நடிக்க வைத்தேன்: 'தண்டட்டி' இயக்குனர் சொல்கிறார் | பல கோடிக்கு பைக்குகள் வாங்கிய அஜித்? |
சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப் சிறப்புத் தோற்றத்தில் அமிதாப்பச்சன், அனுஷ்கா ஆகியோர் நடித்திருந்தும் 'சைரா' படம் தெலுங்கு மாநிலங்களைத் தவிர மற்ற இடங்களில் தோல்வியைத் தழுவியது.
ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட இந்தப் படம் அங்கு எதிர்பாராத விதத்தில் படுதோல்வி அடைந்தது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் ஓரளவிற்கு வசூலித்தாலும் லாபத்தைத் தராமல் நஷ்டத்தைத்தான் கொடுத்துள்ளதாம்.
தெலுங்கு தவிர மற்ற மொழிகளில் படத்தை வெளியிட்டவர்கள் கடும் நஷ்டம் அடைந்ததால் அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை ஈடுகட்ட ராம்சரண் முடிவு செய்துள்ளாராம். படத்தை மற்ற மாநிலங்களில் சரியாகக் கொண்டு போய் சேர்க்கவில்லை என்ற கோபத்தில் அவர் இருக்கிறாராம்.
'பாகுபலி' அளவிற்கு இல்லை என்றாலும் இந்திய அளவில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு நிறைய இருக்கிறது என்கிறார்கள்.