2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! | வெப் தொடர் இயக்கும் ஸ்ரீ கணேஷ்! | சித்தா படத்தின் டிரைலரை வெளியிடும் சூர்யா! | ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அனிமல் படக்குழுவினர்! | சிரஞ்சீவி படத்தில் மூன்று கதாநாயகிகள்! |
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஏன் என்பது பற்றி இயக்குநர் சேரன் விளக்கம் அளித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் மக்களை அதிகம் அதிர்ச்சி அடைய வைத்தவர் இயக்குநர் சேரன் தான். தேசிய விருதெல்லாம் வாங்கியவர், தேவையில்லாமல் பேரைக் கெடுத்துக் கொள்ளப் போகிறார் என சேரனைப் பற்றி விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் இந்த விமர்சனங்களையெல்லாம் தாண்டி சிறப்பாக விளையாடினார் சேரன். இம்முறை டைட்டிலை வெல்ல அவருக்கே அதிக வாய்ப்பிருப்பதாக மக்கள் கருதினர். இளம் போட்டியாளர்களுக்கு சமமாக டாஸ்க்குகளில் திறமையாக விளையாடிய சேரன், இறுதி வாரத்திற்கு முன்பே வெளியேறினார்.
அவர் எதிர்பார்த்ததைப் போலவே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இளைஞர்கள் மத்தியிலும் சேரனுக்கு அறிமுகம் கிடைத்தது. சேரன் பெயரில் ஆர்மி கூட ஆரம்பிக்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பிய சேரன் மீண்டும் பட வேலைகளில் ஈடுபடத் தொடங்கி விட்டார். அவர் நடித்துள்ள ராஜாவுக்கு செக் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி பேட்டியொன்றில் பேசியுள்ளார் சேரன். அதில், “சும்மா வீட்டில் உட்கார்ந்திருந்தால் யாராவது வந்து சோறு போடப்போறாங்களா? கடந்த நான்கு வருடங்களால் நான் படம் பண்ண முடியவில்லை. சூழலும் மோசமாக இருந்தது. பிரச்சனைகளும் இருந்தது.
ஆனால் என் பிரச்சனையை யாரும் வந்து கேட்கவில்லை? படமும் கொடுக்கவில்லை. ஏன் சேரன் படம் பண்ணவில்லை? அவருக்கு என்னாச்சு? என கேட்டு படம் கொடுத்தார்களா யாராவது?” எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.
விரைவில் விஜய் சேதுபதியை வைத்து சேரன் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். விஜய் சேதுபதியின் அறிவுரையால் தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே சென்றார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.