இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா, தற்போது உருவாக்கியுள்ள கம்ம ராஜ்ஜியம் லோ கடப்பா ரெட்லு தெலுங்குப் படத்தின் டிரைலர் கடந்த 27ம் தேதி வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் ஆகியோரைக் கிண்டலடிக்கும் காட்சிகளும் தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியைப் பாராட்டும் காட்சிகளும் டிரைலரில் இடம் பெற்றுள்ளன.
அந்தப் படத்திற்குப் பிறகு தன்னுடைய அடுத்த படமாக மெகா பேமிலி படம் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ராம்கோபால் வர்மா அறிவித்தார். ஆனால், அறிவிப்பை வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக அதிலிருந்து பின்வாங்க விட்டார்.
“மெகா பேமிலி என்பது 39 குழந்தைகளைக் கொண்ட ஒரு மனிதரைப் பற்றியது. ஆனால், அந்தக் குடும்பத்தில் நிறைய குழந்தைகள் இருப்பதாலும், நான் குழந்தைகள் பற்றிய படத்தை எடுப்பதில் சிறந்தவன் இல்லை என்பதாலும் அதை நான் எடுக்கவில்லை,” என அறிவித்துவிட்டார்.
மெகா பேமிலி என்பது நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தினரைப் பற்றிக் குறிப்பிடுவதாகும். அது பற்றிய அறிவிப்பு வந்ததுமே சிரஞ்சீவி, ராம்கோபால் வர்மாவைத் தொடர்பு கொண்டு எச்சரித்ததாகவும், அதனாலேயே அவர் பின் வாங்கிவிட்டார் என்றும் டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.