அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் தீபாவளி விருந்தாக கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இப்படத்தின் வசூல், ரூ. 100 கோடியை தாண்டியதாக செய்திகள் வந்தாலும், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செய்தி அதிர்ச்சியடைய வைத்தது.
சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர், விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து, போலீசார் விரைந்து சென்று, வீடு முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில், வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்து, மிரட்டல் விடுத்த நபரை வலைவீசி தேடினர்.
இறுதியாக, மிரட்டல் விடுத்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர் சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.