விக்ரம் வேதா ரீமேக்கிலிருந்து ஆமீர்கான் விலகியது ஏன் | விக்ரம் பிரபுவின் பகையே காத்திரு | கொற்றவை முதல் பாகம் நிறைவு | கொரோனா 2வது அலை: சாய் பல்லவி படம் தள்ளிவைப்பு | சென்னையில் ஸ்பானிஷ் திரைப்பட விழா: 4 நாட்கள் நடக்கிறது | இறுதிக்கட்டத்தில் அன்பறிவ் | பகத் பாசில் ரசிகர் மன்றத் தலைவராக விரும்பும் பாலிவுட் நடிகர் | மகேஷ்பாபுவை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | மாரடைப்பு ஏற்பட்ட விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிக்சை | வீரம் டிரஸ்ல இல்ல புரோ - நெட்டிசனுக்கு பதில் கொடுத்த ஜூலி |
நடிகர் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினியைப் போன்றே குழந்தை நட்சத்திரமாக இருந்து, பின், நடிகையாக மாறியவர் ஷாம்லி. தொன்னூறுகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி, அஞ்சலி, துர்கா, தைப்பூசம், தேவர் வீட்டுப் பொண்ணு என பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெயர் பெற்றவர்.
ஓயே என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் நடிகையாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 2016ல் நடிகர் விக்ரம் பிரபுவுடன் வீர சிவாஜி என்ற படத்தில் இணைந்து நடித்தார். அதன்பின் வாய்ப்பு இல்லை. இருந்த போதும் மாடலிங் மற்றும் ஓவியம் என பிசியாக இருந்து வரும் ஷாம்லி, சமூக வலைதளங்களிலும் பிசியாக இயங்கி வருகிறார்.
ஓவியரான ஏ.பி.இளங்கோவிடம் ஓவியம் பயின்றிருக்கும் ஷாம்லி, தன் ஓவியப் படைப்புகளை, காட்சிப் படுத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். சமீபத்தில் பெங்களூருவில் துவங்கிய ஓவியக் கண்காட்சியில், தன்னுடைய படைப்புகளையெல்லாம் ஷாம்லி காட்சிப்படுத்தி இருக்கிறார்.
காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அந்த ஓவியங்களில் பல, பெண்களை ஆபாசமாக காட்டுவதாக இருக்கிறது. இதையடுத்து, ரசிகர்கள் பலரும், ஷாம்லியின் எண்ணங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், அதை ஏற்க மறுக்கிறார் ஷாம்லி.
ஓவியம் என்பது ஒரு கற்பனையான படைப்பு. அழகியல் சம்பந்தப்பட்டது. அதில் ஆழமான உணர்வுகளையெல்லாம் செலுத்த வேண்டியதில்லை. கலைப் படைப்பான கற்பனையான ஓவியத்தின் அழகையும், ஆழமான உணர்வுகளையும், கைத் திறனையும்தான் ரசிக்க வேண்டுமே தவிர, அதில் உள்ளே நுழைந்து, ஆபாச ஆராய்ச்சியெல்லாம் செய்யக் கூடாது என்கிறார் ஷாம்லி.