Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'விஸ்வாசம்' வழியில் 'பிகில்' ?

29 அக், 2019 - 12:30 IST
எழுத்தின் அளவு:
Bigil-in-Viswasam-way

தமிழ் சினிமாவில் ஹீரோக்களை நம்பித்தான் சினிமா இருக்கிறது என்ற பொய்யான தோற்றம் ஒன்றை சில இயக்குனர்கள் அவர்களையும் நம்பாமல் அவர்களது சுயநலத்திற்காக உருவாக்கிவிட்டார்கள். அதனால், உண்மையான திறமையான இயக்குனர்கள் கூட பல சமயங்களில் வெளியில் தெரியாமல் போய்விடுகிறார்கள்.

இந்த வருட பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் ஒன்று 'விஸ்வாசம்'. அந்தப் படத்தைப் பற்றி முதலில் எதிர்மறையான விமர்சனங்களும் வெளிவந்தன. உடனே, பெண்களுக்கான படம், அப்பா, மகளின் அருமையான பாசம் என படத்தைப் பற்றிய பேச்சுக்களை மாற்றிப் பேச ஆரம்பித்தனர். அது நன்றாக வேலை செய்து அஜித் படம் அப்பா, மகள் பாசப் படமாக மாறியது. அதற்கு 'கண்ணான கண்ணே' பாடலும் மிகவும் ஒத்துழைத்தது.

அந்த நிலை தற்போது மீண்டும் 'பிகில்' படத்திற்காக வந்துள்ளது. இந்தப் படத்திற்கு வெளிவந்த விமர்சனங்களில் எதிர்மறையான விமர்சனங்கள்தான் அதிகம். அதனால், இது பெண்களுக்கான படம், ஏழைப் பெண்கள், பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி முன்னேற வேண்டும் என்று சொல்லும் படம் என கடந்த இரண்டு நாட்களாக வாய் வழித் தகவலாக பரப்பி வருகிறார்கள்.

கடந்த நான்கு நாட்களில் விஜய் ரசிகர்கள் அனைவரும் படத்தைப் பார்த்துவிட்டார்கள். இன்று முதல் குடும்பத்தினர்தான் படத்தை வந்து பார்க்க வேண்டும். அப்படி வந்தால்தான் படம் லாபத்தைக் கொடுக்கும். எனவே, 'பிகில்' பெண்களுக்கான படம் என்பதை இன்று முதல் அதிகமாகவே சொல்வார்கள். அதற்கு 'சிங்கப் பெண்ணே' பாடலும் உதவியாக அமைந்துள்ளது.

அது 'வொர்க்அவுட்' ஆகி படத்திற்கு இனி வரும் நாட்களிலும் தொடர் கூட்டம் கூடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குநரான ராதிகா ஆப்தேஇயக்குநரான ராதிகா ஆப்தே ஓவியரான அஜித்தின் மச்சினிச்சி ஷாம்லி ஓவியரான அஜித்தின் மச்சினிச்சி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

JMK - Madurai,இந்தியா
29 அக், 2019 - 16:24 Report Abuse
JMK விசுவாசம் படத்தோடு பீகிள் படத்தை காம்பரே பண்ணாதீங்க ? பிகிலுக்கு வூதிடங்க சங்கு ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in