ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
இந்தியத் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களாக வரலாற்றுப் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தெலுங்கில் தயாரிக்கப்பட்ட 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டே பெரும் வசூலைக் குவித்தன.
அதன்பின்னர் தமிழ், மலையாளம், ஹிந்தி மொழிகளில் கூட வரலாற்றுப் படங்களைத் தயாரிக்கும் ஆர்வம் வந்துள்ளன. ஹிந்தியில் 'மகாபாரதம்' கதையை சினிமாவாகத் தயாரிக்கப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். இப்போது அந்தப் படத்தில் திரௌபதி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கப் போகிறாராம். இது பற்றிய அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார். மேலும், படத்தை அவரும் இணைந்து தயாரிக்க உள்ளாராம்.
தீபிகா ஏற்கெனவே 'பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத்' ஆகிய வரலாற்றுப் படங்களில் நடித்து பாராட்டைப் பெற்றவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
2020 ஜனவரியில் ஆரம்பமாக உள்ள 'மகாபாரத்' படம் 2021 தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. ரூ.1000 கோடி பட்ஜெட்டில் ஹிந்தியில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது.