Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலுக்கு முன் கடமைகள் உள்ளன: கவின்

25 அக், 2019 - 15:16 IST
எழுத்தின் அளவு:
I-have-some-commitment-says-Kavin

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பதினாரு போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்கள் நடிகர் கவினும், லாஸ்லியாவும். இதில், லாஸ்லியா இறுதிப் போட்டி வரை வந்தார். ஆனால், அவரால் மூன்றாவது இடத்தைத்தான் பெற முடிந்தது.

ஆனாலும், மொத்த நிகழ்ச்சியிலும் பேசும் பொருளாக இருந்தது, கவின் - லாஸ்லியா இருவரும் காதலித்ததுதான். நிகழ்ச்சி முடிவதற்குள், இருவரும் தங்கள் காதலை ஓபனாக தெரிவித்து, ஒன்று சேருவர் என எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், அப்படி நடக்கவில்லை.

இருந்தபோதும், நிகழ்ச்சி முடிந்த பின், இருவரும் வெளியே வந்து, தங்களுடைய காதலை ஓபனாகச் சொல்லி, திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொல்வர் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதுவும் இல்லை. இதற்கிடையில், போட்டியாளர்களில் ஒருவர் மற்றொருவர் வீட்டுக்குச் சென்று பொழுதைக் கழிப்பது என நடந்து கொண்டனர். அந்த நிகழ்விலும், இருவரும் சந்திக்கவில்லை.

ஆனால், பிக்பாஸ் கொண்டாட்டம் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கவினும், லாஸ்லியாலும் கலந்து கொண்டு நடனமெல்லாம் ஆடி இருக்கின்றனர். வேஷ்டி - சட்டையில் கவின் நிகழ்ச்சிக்கு வர, மார்டன் உடையில் லாஸ்லியா வந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியின் போது, கவினிடம் லாஸ்லியாவின் காதலைச் சொல்லி, இருவருக்கும் திருமணம் எப்போது என சிலர் கேட்டு இருக்கின்றனர்.

அதற்கு பதில் அளித்த கவின், "இப்போதைக்கு காதலைப் பற்றி நான் யோசித்துக் கூட பார்க்கவில்லை; அதற்குள், திருமணத்துக்கெல்லாம் போய் விட்டீர்கள். முதலில் எனக்கென்று சில கடமைகள் உள்ளன. அதையெல்லாம், நான் வெற்றிகரமாக முடிக்க வேண்டும். அதன்பிந்தான், காதல்-கல்யாணம் குறித்தெல்லாம் யோசிக்க வேண்டும்" என சொல்லியிருக்கிறார்.

ஆனால், தனக்கு இது குறித்து எதுவுமே தெரியாது என இலங்கைக்குச் செல்லும் முன் லாஸ்லியா கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஆபாச எல்லைக்குள் போக மாட்டேன்: ப்ரியா வாரியர்ஆபாச எல்லைக்குள் போக மாட்டேன்: ... நவ.,15க்கு தள்ளிப்போன சங்கத் தமிழன் நவ.,15க்கு தள்ளிப்போன சங்கத் தமிழன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

27 அக், 2019 - 11:27 Report Abuse
Prem Stalin responsible answer....... nice
Rate this:
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
25 அக், 2019 - 17:22 Report Abuse
Thiagarajan Kodandaraman அந்த நிகழ்ச்சியே செட் அப் செய்து கொடுக்கும் நிகழ்ச்சிதானே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in