Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒத்த செருப்புக்கு குளோபல், ஆஸ்கர் நடுவர்கள் பாராட்டு

25 அக், 2019 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Othaseruppu-receiving-good-comment-in-globaly

பார்த்திபன் தயாரித்து, இயக்கி, அவர் ஒருவர் மட்டுமே நடித்த ‛ஒத்த செருப்பு' படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப் படம் உலக பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கோல்டன் குளோப் விருதுக்காக திரையிடப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் பார்திபனையும், படத்தையும் பாராட்டி உள்ளனர். இதை தொடர்ந்து ஆஸ்கர் அகாடமி குழுவும் படத்தை பார்த்து பார்த்திபனை பாராட்டி உள்ளனர்.

இதுகுறித்து பார்த்திபன் கூறியதாவது: நான் முன்பே பலமுறை கூறியது போல் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தின் உருவாக்கம் என்பது உணர்ச்சிபூர்வமானதும், பல்வேறு சவால்கள் நிறைந்தததுமாகும். அந்த தருணங்களில் எனக்கு உற்சாகம் தந்தது, இப்படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனும் எண்ணம் தான். நமது ரசிகர்கள் தாண்டி தற்போது உலகளவில் இப்படத்திற்கு கிடைக்கும் பெரும் மரியாதையும், பாராட்டும் என்னை நெகிழச் செய்வதாக உள்ளது.

கோல்டன் குளோப் மெம்பர்களின் திரையிடல் என்பது எனக்கு வைக்கப்பட்ட உச்சபட்ச பரிட்சை போன்றிருந்தது. திரையிடலுக்கு பிறகு அவர்கள் என்னிடம் நெருக்கமாக உரையாடியதும், படம் பற்றி நிறைய விஷயங்கள் விவாதித்ததும் மனதுக்கு நெகிழ்வாக இருந்தது. மேலும் படத்தினை மாறுபட்டதொரு முயற்சியாக அவர்கள் பாராட்டியது எனக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிகிலுக்கா.... விக்கிக்கா... திருப்பதியில் நயன்தாரா சாமி தரிசனம்பிகிலுக்கா.... விக்கிக்கா... ... பிப்ரவரியில் சந்தானம் படம் ரிலீஸ் பிப்ரவரியில் சந்தானம் படம் ரிலீஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
29 அக், 2019 - 18:01 Report Abuse
Vasudevan Srinivasan திரைக்கதை திலகம் கே. பாக்யராஜ் அவர்களை 'குருவை மிஞ்சிய சிஷ்யன்' என்று பலர் பார்த்துவர நீங்களும் 'உங்கள் குரு (பாக்யராஜ் சார்)' வழியில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக மிளிர்கிறீர்கள்..' தொடர்ந்து பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள் பார்த்திபன் சார்..
Rate this:
Krish - Chennai ,இந்தியா
25 அக், 2019 - 16:34 Report Abuse
Krish மிக்க சந்தோசம். விருது கிடைக்க வேண்டுவோம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in