அட்லீ - பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | கடைசி கட்ட ஓட்டத்தில் 'வாரிசு, துணிவு' | விஜய் 67ல் இணைந்த சஞ்சய் தத் - அடுத்தடுத்து வந்த அப்டேட்கள் | ஒழுங்கா வேலைய பாரு : ரசிகருக்கு ரஜினி அறிவுரை | திருப்பதி அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு : ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய கமல் | குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம் | அமானுஷ்யத்தின் பக்கங்களை புரட்டும் ‛கருங்காப்பியம்' : டிரைலர் வெளியீடு | திருமணநாளில் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்திய எஸ்.ஏ.சந்திரசேகர் | வட இந்தியர்கள், தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்கிறார்கள்: சந்தீப் கிஷன் | 'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் |
ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால், கதையின் நாயகியாக நடித்த படம் ‛ஆடை'. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கட்டடத்தில் ஆடையின்றி நிர்வாணமாக மாட்டிக் கொள்ளும் ஒரு பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தான் படத்தின் கதை. இதில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருந்தார்.
பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் படம் பார்த்த பின்னர் அது காட்சிப்படுத்தப்பட்ட விதத்தை அனைவரும் பாராட்டினர். இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் கங்கனா ரணாவத் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் நடிக்கவில்லை என இப்பட உரிமையை வைத்துள்ள ஏ அண்ட் பி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛ஆடை' படத்தின் அனைத்து மொழிக்கான ரீ-மேக் உரிமை எங்களிடம் உள்ளது. ஹிந்தியில் இப்படத்தை பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து எடுக்க உள்ளோம். இப்படம் இந்திய மொழி மட்டுமல்லாது சர்வதேச பார்வையாளர்களுக்கான கதை. ஹிந்தி ரீ-மேக்கில் கங்கனா நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எங்கள் நிறுவனம், கங்கனாவை நடிக்க வைக்க அணுகவில்லை. தயது செய்து வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.