பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
விஜய குமாரின் வாரிசான வனிதா, ‛சந்திரலேகா' படத்தில் விஜய் ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு மாணிக்கம், படத்தில் நடித்தார். இரண்டு படங்களுக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த வனிதா, ‛நான் ராஜாவாக போகிறேன்' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். சும்மா நச்சுன்னு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படங்களில் நடித்தார். இதுதவிர ஒரு மலையாளம், ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார். வனிதாவின் மொத்த சினிமா கேரியரே இது தான்.
ஆனால் தனது சொந்த வாழ்கை பரபரப்பு மூலம் மக்களிடையே தன்னை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இதன் அடுத்த கட்டமாக சீரியல் நடிகை ஆகிவிட்டார்.
சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மாதிரி, சந்திரலேகா என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் களமிறங்கி உளு்ளார். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தொடர் முழுவதும் அவர் நடிகை வனிதாக விஜயகுமாராகவே சிறப்பு தோற்றத்தில் வருகிறார். சரிகம இந்தியா தயாரிக்கும் இந்த தொடரை ஆனந்த்பாபு இயக்குகிறார்.