Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முனைவர் பட்டம்: சார்லி நெகிழ்ச்சி

23 அக், 2019 - 10:46 IST
எழுத்தின் அளவு:
Actor-charlie-happy-about-Doctorate

நடிகர் சார்லியின் இன்னொரு முகம் அவர் நல்ல எழுத்தாளர். "தாகூருடைய நாடகங்கள், நவீன தமிழ் நாடகங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள்" என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை அவர் சாகித்ய அகாடமியில் சமர்ப்பித்தார். அதன் பிறகு தமிழ் காமெடி நடிகர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டார்.

மவுன படங்கள் காலம் முதல் யோகி பாபு வரை காமெடி நடிகர்களின் படங்கள், அவர்களது காமெடிகள் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து அதனை தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில் சமர்ப்பித்தார். இந்த ஆய்வுக்காக நேற்று சார்லிக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக 12-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், சார்லிக்கு முனைவர் பட்டத்தை வழங்கினார். மொரிசீயஸ் நாட்டு முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன், ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், எழுத்தாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் உள்பட 150 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார். விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

முனைவர் பட்டம் வாங்கியது குறித்து நடிகர் சார்லி கூறியதாவது: இந்தியாவில் மொழிக்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகத்தில் நான் முனைவர் பட்டம் பெறுவது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது, எனது தாய், தந்தை, எனக்கு முதல் வகுப்பு எடுத்த ஆசிரியை, முனைவர் பட்ட வகுப்பு எடுத்த பேராசிரியர் மற்றும் எனக்கு இதுவரை கற்றுக் கொடுத்த, இனி கற்றுக்கொடுக்க உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த பட்டத்தை சமர்ப்பிக்கிறேன். என்றார்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
பிகில், கைதி: பைரசி இணையதளத்தில் வெளியிட தடைபிகில், கைதி: பைரசி இணையதளத்தில் ... மகனுக்கு எனது ரசிகர்களை கொடுக்கிறேன்: விக்ரம் உருக்கம் மகனுக்கு எனது ரசிகர்களை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

JSS - Nassau,பெர்முடா
27 அக், 2019 - 18:24 Report Abuse
JSS சார்லிக்கு பட்டமா வழங்கியது அவறது ஆய்வுக்காக. அதனால் அதை வாசகர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வது தவறு. சார்லி மிகச்சிறந்த காமெடி நடிகர். யார் யாரோ ஒன்றுமே செய்யாமல் அதிகாரம் பதவியிலிருந்த பொது மக்களின் எதிர்ப்புக்கு இடையே டாக்டர் பட்டம் வாங்கும்போது ஆராய்வு செய்த இவர்க்கு கொடுப்பதில் என்ன தவறு.
Rate this:
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
26 அக், 2019 - 19:54 Report Abuse
Sathyanarayanan Bhimarao சார்லி அவர்களே தங்கள்: கல்விப்பணி தொடரட்டும்.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25 அக், 2019 - 09:59 Report Abuse
skv srinivasankrishnaveni AAHAA VERY BEST Mr CHAARLY REALLY YOU ARE GREAT EVERY FLOWER HAS ITS OWN COLOUR AND SMELL. JUST LIKE THAT YOU DID A GREAT JOB AND YOU GOT THIS, MAY GOD BLESS YOU IM ALSO BLESSING, THIS SHOULD BECOME A BOOK WE ARE READY TO BUY AND READ, REALLY YOU ARE Dr CHARLY (THINK YOUR REAL NAME IS MANOHAR)
Rate this:
kumar - hyderabad,இந்தியா
24 அக், 2019 - 14:10 Report Abuse
kumar Greatness of thought, humble behaviour and selfless character seen in his message on getting his doctorate. Respect you charliji.
Rate this:
Bala Iyer - Tirunelveli,இந்தியா
24 அக், 2019 - 08:47 Report Abuse
Bala Iyer வாழ்த்துக்கள். தங்களது ஆய்வு தலைப்பே மிகவும் அருமை. உங்களின் பணிக்கு இடையிலும் அதிக நேரம் ஒதுக்கி டாக்டர் பட்டம் பெற அயராது உழைத்த நீங்கள் மாணவர்களுக்கு ஒரு இன்ஸபிரெய்ங் உதாரணம். உங்களின் நடிப்பு மிக சிறப்பு. பெரிய சிரிப்பு நடிகர்கள் மத்தியில் நீங்களும் நிலைத்து நின்றதே ஒரு சாதனை தானே உங்களின் ஆய்வை (கட்டுரையை) புத்தகமாக கண்டிப்பாக வெளியிடுங்கள் . படிக்க காத்திருக்கிறோம். அது ஒரு நல்ல கோர்வையாக தமிழ் சினிமாவில் காமெடி குறித்த சிறந்த புத்தகமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மீண்டும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். உங்களின் ரசிகர்களில் ஒருவனாக மட்டும் இதை எழுத வில்லை ஒரு கல்வியாளனாக, கல்லூரி பேராசியராக மட்டுறும் ஒரு பள்ளியில் முதல்வராக இதை எழுதுகிறேன். l
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in