Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்படியும் ரசிகர்கள்.... இப்படியும் ரசிகர்கள்...

22 அக், 2019 - 17:18 IST
எழுத்தின் அளவு:
Bigil:-Vijay-Fans-activities

நடிகர் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பிகில். இந்தப் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கி இருக்கிறார். கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்திருக்கிறார். மிகப் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இந்தப் படத்தில், நடிகர்கள் விவேக், டேனியல் பாலாஜி, மனோபாலா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வரும் 25ல் ரிலீசாகிறது. தீபாவளியை முன்னிட்டு, இந்தப் படம் ரிலீசாக இருக்கும் சூழலில், இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் பல்வேறு விதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான வேண்டுதல்களை வைத்து அதை நிறைவேற்றி வருகின்றனர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர். குறிப்பபாக நாகை வடக்கு மாவட்டம் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், மயிலாடுதுறையில் இருக்கும் பிரசன்ன மாரியம்மன் கோவிலில், பிகில் பட வெற்றிக்காக சிறப்பு வழிபாடு நடித்தினர். பின், மண் சோறு சாப்பிட்டனர். இன்னும் ஏதோ ஒரு ஊரில் பிகில் வெற்றிக்காக கிரேன்களில் பறவை காவடி எடுத்துள்ளனர்.

இந்த வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு ஒரு நடிகருக்கு எதற்காக இப்படி தங்களை வருத்தி கொள்கிறார்கள் விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.

அதேசமயம் இன்னும் சில ரசிகர்கள் பாராட்டும் படியான செயல்களை செய்துள்ளனர். பிளக்ஸ், பேனர் கலாச்சாரங்களை தவிர்த்து, நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரம் பெண்கள் பள்ளி உட்பட 4 இடங்களில் 12 சிசிடிவி கேமராக்கள் அமைத்து கொடுத்து, பொதுமக்களுக்கு பயனுள்ள விஷயங்களை செய்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாராவிற்கு நன்றி தெரிவித்த காத்ரினாநயன்தாராவிற்கு நன்றி தெரிவித்த ... இந்தியன் 2 பற்றி காஜல் அகர்வால் இந்தியன் 2 பற்றி காஜல் அகர்வால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Ram Sekar - mumbai ,இந்தியா
28 அக், 2019 - 16:21 Report Abuse
Ram Sekar இந்த நடிகனுக்கு பறவை முனியம்மா பறவாயில்லை சொந்த திறமை இந்த அம்மாவுக்கு சோறு போட்டது
Rate this:
Shekar Raghavan - muscat,ஓமன்
28 அக், 2019 - 12:33 Report Abuse
Shekar Raghavan 👍👍👍 சமூகம்,
Rate this:
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
26 அக், 2019 - 20:45 Report Abuse
TAMILAN மயக்கத்தில் இருக்கும் இளைஞர்கள். விஜய் அவர்கள் ரஜினி போல் இருக்காமல் தந்து ரசிகர்களுக்கு ஒரு நல்ல வழி காட்ட வேண்டும் . என்ன இருந்தாலும் உண்மையில் மக்களுக்காக, மாணவர்களுக்காக பாடுபடும் சூர்யா தான் சூப்பர் ஸ்டார்
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24 அக், 2019 - 03:52 Report Abuse
J.V. Iyer அடடா... வரும் லாபத்தில் ரசிகர்களுடன் பங்கிடப் போகிறாரா விஜய்? நல்ல விஷயம் தானே? வேலை இல்லாமல் சுற்றும் ரசிகர்களுக்கு இப்படி உதவி செய்தால்தான் விஜய்க்கு அழகு.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23 அக், 2019 - 16:25 Report Abuse
skv srinivasankrishnaveni முப்பத்தஞ்சு ரூபாய்க்கே வகிக்கில்லாதவனெல்லாம் சினிமாபாக்கறதுக்கு எவ்ளோ சிலவு செய்றானுக தெரியுமா சினிமாலே தீம் இருக்கா கதை இருக்கா ஒரு குப்பையும் இல்லே போறதுக்கு அறையும் குறையுமா நடிகைகள் துணிக்கடையே இல்லாத ஊருலேந்துவந்தாப்பல நிக்குதுங்க
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in