Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மதுப் பழக்கத்தால் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது: மனிஷா கொய்ராலா வேதனை

22 அக், 2019 - 15:55 IST
எழுத்தின் அளவு:
I-lost-my-life-because-of-drinks-habbit-says-Manisha-Koirala

சிம்லா: மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் தனது வாழ்க்கையே நாசமாகி விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் நடிகை மனிஷா கொய்ராலா.

தமிழில் மணிரத்னத்தின் பம்பாய் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா. ரஜினி, கமல் என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சாம்ராட் டாகலை திருமணம் செய்து கொண்ட மனிஷா, பின் நடிப்பதற்கு ஓய்வு கொடுத்தார். ஆனால் அந்தத் திருமணம் தோல்வியில் முடிந்தது.

கடந்த 2012 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா, வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார். இதையடுத்து புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் மனிஷா தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இமாச்சலபிரதேச மாநிலம் கசுலி எனும் இடத்தில் நடந்த குஷ்வந்த் இலக்கிய திருவிழாவில் மனிஷா கொய்ராலா கலந்துகொண்டார். அந்த விழாவில், “எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மக்களுக்கு தெரியப்படுத்த புத்தகம் எழுதினேன். என்னை பார்த்து யாரேனும் புற்றுநோயில் சிக்கி குணமடைந்தவர் என்று சொன்னால் அதற்காக வருத்தப்பட மாட்டேன்.

புற்றுநோய் பாதிப்பில் நான் சிக்கியதை மறந்து எனது நடிப்பு மற்றும் திறமை பற்றி மக்கள் ஒரு நாள் பேசுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டபோது நான் சாவை எதிர்கொண்டேன்.

ஆரம்பத்தில் இருந்த மது பழக்கத்தால் தான் எனது வாழ்க்கை மோசமாக மாறியது. அதை எனது புத்தகத்திலேயே கூறி இருக்கிறேன். மதுப்பழக்கத்தை விட்ட பிறகு, இப்போது புதிதாக பிறந்த உணர்வு ஏற்படுகிறது", என மனிஷா கொய்ராலா பேசினார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மஞ்சிமா மோகனுக்கு காலில் எலும்பு முறிவுமஞ்சிமா மோகனுக்கு காலில் எலும்பு ... நயன்தாராவிற்கு நன்றி தெரிவித்த காத்ரினா நயன்தாராவிற்கு நன்றி தெரிவித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Nallavan Nallavan - Kolkata,இந்தியா
25 அக், 2019 - 08:54 Report Abuse
Nallavan Nallavan உங்க போர்ன் வெளியானதா சர்ச்சை எழுந்ததே ? அதுக்கு எப்போ வருத்தப் போறீங்க ?
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
23 அக், 2019 - 16:15 Report Abuse
shoba who is she?
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23 அக், 2019 - 07:41 Report Abuse
skv srinivasankrishnaveni saaraayam kudichchaal வாய்ருவெந்து குடல்வெந்து சாவானுக அதற்குமுன்னாடி மனைவி அம்மா அப்பா என்று சகலத்தையும் கொலையும் செய்வானுக குடிக்க காசு தரலேன்னு அதே போல புகைப்பவனுகளுக்கு கேன்சர் வரும் நுரையீரலில் ஆனால் இந்த பாவிகள் விடும்புகையால் எவ்ளோபெருக்கு கேன்சர்வந்து சாவுறாங்க தெரியுமா நீ பணக்காரி குடிச்சும் புகைச்சும் சாகலாம் பிள்ளையாக்குட்டியா இருக்கு
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
22 அக், 2019 - 17:03 Report Abuse
A.George Alphonse எல்லோருமே பட்டபின்புதான் தெளிவு பெறுவார்கள் ஞானியும் ஆவார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in